Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

by automobiletamilan
July 9, 2018
in பைக் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின், RE/WD Flying Flea 125 என்ற மோட்டார்சைக்கிள் உந்துதலில் வடிவமைக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் மோட்டார் சைக்கிள் பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ்

 

இரண்டாம் உலகப்போரின்போது இங்கிலாந்து வான் படையினர் பயன்படுத்திய 59 கிலோ எடை கொண்ட ராயல் என்ஃபீல்ட் WD/RE ஃபிளையிங் ஃபீலா 125 மோட்டார்சைக்கிள் உந்துதலில் மற்றும் கிரேக்க புராணக் கதைகளில் வீராதி வீரனான பெல்லரோபான் பறக்கும் குதிரை மீது அமர்ந்திருக்கும் படம் சின்னமாக பயன்படுத்தப்பட்டுள்ள கிளாசிக் 500 பெகாசஸ் இந்தியா உட்பட சர்வதேச அளவில் சர்வீஸ் பிரவுன் மற்றும் ஆலிவ் டிராப் க்ரீன் ஆகிய இரு நிறங்களில் விற்பனை செயப்பட உள்ளது.

இந்தியாவில் ஆலிவ் டிராப் க்ரீன் நிறம் விற்பனைக்கு அனுமதியில்லை என்பதனால், சர்வீஸ் பிரவுன் நிறத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.

எஞ்சின்

என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் மோட்டார்சைக்கிளில் விற்பனையில் உள்ள கிளாசிக் 500 மாடலில் இடம்பெற்றுள்ள 499 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 27.2  பிஹெச்பி ஆற்றல் மற்றும் 41.3 என்எம் இழுவைத் திறனை வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

சிறப்பு கிளாசிக் 500 பெகாசஸ் , சர்வதேச அளவில் 1000 எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட உள்ள கிளாசிக் 500 பெகாசஸ் மோட்டார்சைக்கிளில் இந்தியாவில் மட்டும் 250 எண்ணிக்கையில் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

தோற்ற அமைப்பில் கிளாசிக் 500 மாடலின் அம்சத்தை பெற்றிருந்தாலும் பெட்ரோல் டேங்கில் மரூன் மற்றும் நீல நிறத்திலான பெகாசஸ் , கேன்வாஸ் துணியால் ஆன பயனீர் பைகள் மற்றும் பித்தளை பக்கிள்ஸ் கொண்ட பெல்ட்டுகள் மற்றும் பெட்ரோல் டேங்கிலும் தயாரிப்பு அடிப்படையில் தனித்துவமான வரிசை எண் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புகைப்போக்கி, எஞ்சின், கைப்பிடி, கீக் ஸ்டார்ட் பெடல், ஹெட்லைட் பெசல் ஆகியவற்றில் கருப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது.

 

இங்கிலாந்தில் விற்பனைக்கு 190 யூனிட்டுகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்தில் கிளாசிக் 500 பெகாசஸ் விலை ரூ. 4.50 லட்சம் (இந்திய மதிப்பில்) ஆகும். எனவே இந்தியாவில் மே 30ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் விலை ரூ. 2.39 லட்சம் (ஆன் ரோடு) அமைந்திருக்கின்றது.

நாளை (ஜூலை 10) மதியம் 2 மணிக்கு RoyalEnfield.com இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Royal Enfield Classic 500 Pegasus Edition image gallery

 

Tags: Royal Enfield Classic 500 Pegasusகிளாசிக் 500 பெகாசஸ்ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ்
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan