Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் அறிமுக தேதி விபரம்

by automobiletamilan
May 25, 2018
in பைக் செய்திகள்

வருகின்ற மே 30ந் தேதி ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் மோட்டார்சைக்கிள் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில், கிளாசிக் 500 பெகாசஸ் விலை விபரம் குறித்தான தகவலும் வெளியாக உள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ்

இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட இங்கிலாந்து ராணுவ வீரர்களுக்கு ராயல் என்ஃபீல்டு வெஸ்ட்வூட் ஆலையிலிருந்து தயாரித்து வழங்கப்பட்ட 59 கிலோ எடையை கொண்ட RE/WD Flying Flea 125 மோட்டார் சைக்கிளை நினைவுக்கூறும் வகையில் மொத்தம் 1000 மோட்டார்சைக்கிள்கள் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், இந்தியாவிற்க்கு 250 எண்ணிக்கையிலும், இங்கிலாந்திற்கு 190 எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட உள்ளது.  இந்தியா உட்பட சர்வதேச அளவில் சர்வீஸ் பிரவுன் மற்றும் ஆலிவ் டிராப் க்ரீன் ஆகிய இரு நிறங்களில் விற்பனை செயப்பட உள்ளது.

இந்தியாவில் ஆலிவ் டிராப் க்ரீன் நிறம் விற்பனைக்கு அனுமதியில்லை என்பதனால், சர்வீஸ் பிரவுன் நிறத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.

என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் மோட்டார்சைக்கிளில் விற்பனையில் உள்ள கிளாசிக் 500 மாடலில் இடம்பெற்றுள்ள 499 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 27.2  பிஹெச்பி ஆற்றல் மற்றும் 41.3 என்எம் இழுவைத் திறனை வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

சிறப்பு கிளாசிக் 500 பெகாசஸ் , சர்வதேச அளவில் 1000 எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட உள்ள கிளாசிக் 500 பெகாசஸ் மோட்டார்சைக்கிளில் இந்தியாவில் மட்டும் 250 எண்ணிக்கையில் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

தோற்ற அமைப்பில் கிளாசிக் 500 மாடலின் அம்சத்தை பெற்றிருந்தாலும் பெட்ரோல் டேங்கில் மரூன் மற்றும் நீல நிறத்திலான பெகாசஸ் , கேன்வாஸ் துணியால் ஆன பயனீர் பைகள் மற்றும் பித்தளை பக்கிள்ஸ் கொண்ட பெல்ட்டுகள் மற்றும் பெட்ரோல் டேங்கிலும் தயாரிப்பு அடிப்படையில் தனித்துவமான வரிசை எண் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புகைப்போக்கி, எஞ்சின், கைப்பிடி, கீக் ஸ்டார்ட் பெடல், ஹெட்லைட் பெசல் ஆகியவற்றில் கருப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்தியாவில் மே 30ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் விலை ரூ. 2.30 லட்சம் (ஆன் ரோடு) அமைந்திருக்கலாம்.

Royal Enfield Classic 500 Pegasus Edition image gallery

Tags: Royal Enfield Classic 500 Pegasusகிளாசிக் 500 பெகாசஸ்ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ்ராயல் என்பீல்டு
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version