ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் 450cc லிக்யூடு கூல்டு என்ஜின் பெற உள்ள கொரில்லா 450 அல்லது ஹிமாலயன் 450 பைக்கின் உற்பத்தி நிலை படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால் நிறம், லோகோ மற்றும் பாடி கிராபிக்ஸ் போன்றவை சேர்க்கப்படவில்லை.
சமீபத்தில் கொரில்லா போர்முறை தாக்குதலை நினைவுப்படுத்தும் வகையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கொரில்லா 450 என்ற பெயரை பதிவு செய்துள்ளதால், ஹிமாலயன் என்று அழைக்கப்படுமா ? அல்லது கொரில்லாவா என நவம்பர் முதல் நாள் தெரிய வரும்.
Royal Enfield Himalayan 450 or Guerrilla 450
ஹிமாலயன் 450 முன்பக்கத்தில் 21 இன்ச் சக்கரமும், பின்புறத்தில் 17 இன்ச் வீலும் கொடுக்கப்பட்டு பைக்குகளின் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள், டூயல் சேனல் ஏபிஎஸ் இருக்கும். ஹிமாலயன் 450 இன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 220 மிமீ இருக்கலாம்.
வட்ட வடிவ TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று டிஜிட்டல் டேகோமீட்டர் அலகினை வெளிப்புற சுற்றளவை கொண்டு கியர்-பொசிஷன் இன்டிகேட்டர் மையத்தில் அமைந்துள்ளது. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் கியர் இண்டிகேட்டரின் வலதுபுறத்திலும் மற்றும் எண்கள் மிகப் பெரிய எழுத்துருவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
கொரில்லா 450 பைக்கில் இடம்பெற உள்ள என்ஜின் 35 hp க்கு கூடுதலான பவர் மற்றும் சிறப்பான டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் யூஎஸ்டி ஃபோர்க், எல்இடி விளக்குகள் மற்றும் புத்தம் புதிய ஒற்றை வட்ட வடிவ இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆகியவற்றை கொண்டதாக இருக்கும்.
நவம்பர் 1, 2023 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் விலை மற்றும் நுட்பவிபரங்கள் வெளியிடப்படும்.