வரும் 2023 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய ஹிமாலயன் 450 மாடலின் சாலை சோதனை ஓட்ட படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

விற்பனையில் உள்ள ஹிமாலயன் 411 மாடலை விட கூடுதலான பவரை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் ஆனது பல்வேறு சிறப்பம்சங்களை நவீன தலைமுறைக்கு ஏற்ற அம்சங்களாக பெற உள்ளது. எனவே மிகவும் மாறுபட்ட டிசைன் அம்சங்களுடன் நவீன டெக்னாலஜி வசதிகளையும் இந்த மாடல் பெற உள்ளது.

ஹிமாலயன் 411 மாடலை விட மாறுபட்ட அம்சமாக கருதுவது மிக முக்கியமாக என்ஜின் இந்த மாடலை பொருத்தவரை 450cc என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக பவர் 40 Hp வரை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இந்திய சந்தையில் கிடைக்கின்ற கேடிஎம் 390 மாடலுக்கு மிகப்பெரிய சவாலாக இந்த மாடல் அமையும்.

பைக் முழுவதுமாக மறைக்கப்பட்டு சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. வழக்கமாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வழங்குகின்ற வட்ட வடிவிலான ஹெட்லைட் பெறுகின்றது. இந்த மாடலுக்கும் எல்சிடி அல்லது கலர் டிஎப்டி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டு கூடுதலாக ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷனை வழங்கும். முன்புறத்தில் ஆப்ஸைடு டவுன் ஃபோர்க் உள்ளது. அடுத்தப்படியாக, முன்புறம் 21 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் வழங்கப்படலாம்.

image source: https://www.instagram.com/the_nakedwolf/