மிகப்பெரிய நடுத்தர மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஸ்போர்ட்டிவ் மாடலாக ஹண்டர் நிலை நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் வெளியான மீட்டியோரின் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு வருவதாக தெரிகின்றது.
சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 புதிய தொழில்நுட்பத்தை பெற்ற இன்ஜின் கொடுக்கப்பட்டு புதிய சேஸ் பெற்று டிரிப்பர் நேவிகேஷன் உட்பட பல்வேறு ஸ்டைலிங் அம்சங்களை கொண்டதாக வெளியானது.
ஹண்டர் 350 என்ற பெயரில் எதிர்பார்க்கப்படுகின்ற பைக்கில் ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேல் நோக்கி எழும்பும் வகையிலான புகைப்போக்கி இணைக்கப்பட்டு, நீட்டிக்கப்பட்ட டெயில் பகுதி கொடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஹண்டரில் புதிய தோற்ற அமைப்பிலான கிளஸ்ட்டரில் அனலாக் மற்றும் டிஜிட்டல் முறையிலான அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி டிரிப்பர் நேவிகேஷன் இணைப்பதற்காக வசதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆனால் சோதனை ஓட்ட மாடலில் இணைக்கவில்லை.
இந்நிறுவனம், டிரிப்பர் நேவிகேஷன் உட்பட பல்வேறு மேம்பட்ட அம்சங்களை கொண்டதாக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் வெளியிடப்பட்டுள்ளது.