ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் டூயல் சேனல் ABS வெர்சன் மோட்டார் சைக்கிளான தண்டர்பேர்ட் 350X மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350X மோட்டார் சைக்கிள்களில் 1.63 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோ ரூம் விலை டெல்லியில்) விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமான மோட்டார் சைக்கிள்களை ஒப்பிடும் போது வழக்கமான மோட்டார் சைக்கிள்கள் 1.56 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கிறது. பாதுகாப்பு வசதிகளுக்காக கூடுதலாக 7000 ரூபாயை சேர்த்து புதிய என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350X மோட்டார் சைக்கிள்கள் 1.63 லட்ச ரூபாய் விலையில் விற்பனையாகிறது.
ராயல் என்பீல்ட் மாடல்களின் விலைகள் உச்சநீதிமன்ற கட்டாயமாக்கிய விதிகளின் படி உயர்த்தப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350X மோட்டார் சைக்கிள்களின் இன்ஜின்கள், தண்டர்பேர்ட் 350 எஞ்சின்களில் இருந்து பெறப்பட்டதாக இருக்கும். இந்த இன்ஜின் 346cc ஆற்றலுடன் 19.8hp மற்றும் உச்சபட்ச டார்க்யூவில் 28Nm கொண்டிருக்கும். மேலும் இது 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350X மோட்டார் சைக்கிள்களில் புதிய ஹேண்டில்பார்கள், ரைடிங் பொசிஷன் மற்றும் சீட்கள் பொருத்தப்பட்டுள்ளது. 500X மற்றும் X வகை போன்று டியூப்லெஸ் டயர்களுடன் புதிய 9 ஸ்போக் பிளாக் அலாய் வீல்களை கொண்டிருக்கும். புதிய என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350X ABS வகைகள் இந்தியாவில் உள்ள டீலர்களை சென்றடைய தொடங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மற்ற மாடல்களான கிளாசிக் 500, ஹிமால்யான் மற்றும் கிளாசிக் சிக்னல் 350 மோட்டார் சைக்கிள்களில் ஏற்கனவே ABS பொருத்தப்பட்டுள்ளது.