Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஸ்கூட்டர் சந்தையில் நெம்பர் 1 யார் தெரியுமா ?

by automobiletamilan
July 15, 2017
in பைக் செய்திகள்

இந்தியாவின் இருசக்கர வாகன சந்தையில் ஸ்கூட்டர் பங்களிப்பு மிகுந்த காணப்படும் சூழ்நிலையில் முதலிடத்தில் ஹோண்டா , அதனை தொடர்ந்து டிவிஎஸ் மற்றும் ஹீரோ நிறுவனங்களும் உள்ளது.

Table of Contents

  • ஸ்கூட்டர் சந்தை நிலவரம்
      • வளர்ச்சியில் யமஹா, சுசுகி
      • வீழ்ச்சியில் ஹீரோ
          • முதல் காலாண்டு விற்பனை நிலவரம்

ஸ்கூட்டர் சந்தை நிலவரம்

மொத்த ஸ்கூட்டர் சந்தையின் பங்களிப்பில் 59 சதவிதம் அளவிற்கு சந்தையை பெற்றுள்ள ஹோண்டா நிறுவனத்தை பின் தொடர்ந்து டிவிஎஸ் நிறுவனம் உள்ளது. நாட்டின் முன்னணி பைக் தயாரிப்பாளரான ஹீரோ ஸ்கூட்டர் சந்தையில் வளர்ச்சியை பெறாமலே வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.

கடந்த 2016-2017 நிதி ஆண்டின் முடிவில் ஹோண்டா நிறுவனம் 31,89,012 அலகுகள் எண்ணிக்கையில் ஸ்கூட்டரை விற்பனை செய்து நாட்டின் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளராக விளங்குகின்றது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தயாரிப்பாளராக சுமார் 8,26,291 அலகுகளை விற்பனை செய்துள்ளது.

இதே காலகட்டத்தில் நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் சரிவினை நோக்கி பயணித்து முந்தைய ஆண்டை விட 4 சதவித வீழ்ச்சி பெற்று 7,89,974 ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

நாட்டின் மற்றொரு முக்கியமான மற்றும் பிரசத்தி பெற்ற யமஹா மோட்டார்ஸ் 4.40,423 அலகுளையும், அதனை தொடர்ந்து சுசுகி 2,80,783 அலகுகளை விற்பனை செய்துள்ளது.

நிறுவனம் FY 17 FY 16 வளர்ச்சி
ஹோண்டா 31,89,012 27,89,537 14%
டிவிஎஸ் 8,26,291 7,73,597 7%
ஹீரோ 7,89,974 8,18,777 -4%
யமஹா 4,40,423 3,18,450 38%
சுசுகி 2,80,783 2,20,388 27%

ஆதாரம்- இந்திய வாகன உற்பத்தி சம்மேளனம் (SIAM)

வளர்ச்சியில் யமஹா, சுசுகி

வளர்ச்சி பாதையில் யமஹா நிறுவனம் முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 38 சதவீதம் வளர்ச்சி பெற்று முன்னணி இடத்தில் உள்ளது. அதனை தொடர்நது சுசுகி முந்தையை வருடத்தை விட 27 சதவிதமும், ஹோண்டா 14 சதவீதமும், டிவிஎஸ் 7 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது.

வீழ்ச்சியில் ஹீரோ

நமது நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ நிறுவனம் 4 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பபாக மேஸ்ட்ரோ எட்ஜ் , டூயட் போன்றவை சிறப்பான பங்களிப்புடன் செயல்பட்டாலும் டிவிஎஸ் ஜூபிடர் மற்றும் ஆக்டிவா போன்றவற்றை நெருங்க இயலவில்லை.

நெம்பர் 1

ஹோண்டா நிறுவனம் கடந்த 2016-2017 ஆம் நிதி ஆண்டில் 31 லட்சத்து 89 ஆயிரத்து 12 ஸ்கூட்டர்களை விற்பனை செயுது முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் டிவிஎஸ் மற்றும் அதனை பின் தொடர்ந்து ஹீரோ உள்ளது.

முதல் காலாண்டு விற்பனை நிலவரம்

நடப்பு நிதி வருடத்தின் முதல் காலாண்டின் முடிவிலும் ஹீரோ வீழ்ச்சி அடைந்துள்ளது. சுசுகி மற்றும் டிவிஎஸ் போன்ற நிறுவனங்களுடன் ஹோண்டா நிறுவனமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

நிறுவனம்  Q1 FY 18  Q1 FY 17 வளர்ச்சி
ஹோண்டா 973725 797114 22%
டிவிஎஸ் 249077 183805 35%
ஹீரோ 209790 210876 -0.5%
யமஹா 109476 103179 6%
சுசுகி 89323 56424 58%

மேலும் படிங்க – > பெண்கள் விரும்பும் ஸ்கூட்டர்கள்

உங்கள் மனதில் என்ன ? மறக்காமா கமென்ட் பன்னுங்க ..! ஷேர் பன்னுங்க..

Tags: Scooterஆக்டிவாடூயட்ஜூபிடர்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version