வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள சிம்பிள் எனெர்ஜி நிறுவனத்தின் மார்க் 2 மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணமாக ரூ.1947 வசூலிக்கப்பட உள்ளது.
விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள அன்றைக்கு மாலை 5 மணி முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ள நிலையில் கட்டணமாக ரூபாய் 1947 நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ஸ்வாப் செய்யும் வகையிலான பேட்டரியை பெற்றுள்ள மார்க் 2 மாடல் 4.8kWh திறனை கொண்டிருக்கும். போட்டியாளர்களை விட ஈக்கோ மோடில் அதிகபட்சமாக 240 கிமீ ரேஞ்சு வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.
புதிய சிம்பிள் மார்க் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1.25 லட்சத்திற்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.