Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஸ்கோடா குஷாக் காரின் வடிவ மாதிரி படம் வெளியானது

by automobiletamilan
February 19, 2021
in பைக் செய்திகள்

ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் இந்தியா புராஜெக்ட் 2.0 திட்டத்தின் முதல் மாடலாக வரவுள்ள குஷாக் எஸ்யூவி மார்ச் 18 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் காரின் வடிவ மாதிரி படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காரின் பாகங்கள் 95 % உள்நாட்டில் தயாரிக்கப்படுவதனால் விலை மிக குறைவாகவும், போட்டியாளர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்கோடா குஷாக் எதிர்பார்ப்புகள்

டீசல் இன்ஜின் இடம் பெறாமல் வரவுள்ள குஷாக்கில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (115PS/200Nm) மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் (150PS/250Nm) மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் பெறலாம்.

இந்தியாவிற்கான பிரத்தியேகமான MQB A0 IN மாடூலர் பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள காரின் தோற்ற அமைப்பு பல்வேறு முறை சோதனை ஓட்ட படங்கள் மற்றும் தற்போது வெளியாகியுள்ள மாதிரி படங்களின் மூலம் வெளியாகியுள்ளது. ஆனால் இன்டிரியர் தொடர்பான எந்த படங்களும் வெளியாக நிலையில், சில தகவல்களின் அடிப்படையில் மை ஸ்கோடா கனெக்ட் தொழில்நுட்பத்தையும் கொண்ட நவீன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டங்களுடன் 12.3 இன்ச் சென்டரல் கன்சோலில் தொடுதிரை கொண்டிருக்கின்றது.

ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, கியா செல்டோஸ், நிஸான் கிக்ஸ் உட்பட வரவிருக்கும் ஃபோக்ஸ்வேகன் டைகன் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

Tags: Skoda Kushaq
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version