Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

சுசூகி ஆக்செஸ் 125, பர்க்மேன் ஸ்ட்ரீட் மாடலில் ரைட் கனெக்ட் வசதி அறிமுகம்

by automobiletamilan
October 7, 2020
in பைக் செய்திகள்

சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது ஆக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் என இரு ஸ்கூட்டர்களிலும் ரைட் கனெக்ட் எனப்படுகின்ற ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மூலம் நவீனத்துவமான அம்சங்களை பெறுகின்ற கிளஸ்ட்டரை இணைத்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஆக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 என இரு மாடல்களும் பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு ஏற்ற ஒரே இன்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றன. சுசுகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்துடன் (Suzuki Eco Performance) கூடிய 8.7 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 124.3 cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.2 Nm  இழுவைத் திறனை பெற்றதாக சிவிடி கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டிருக்கின்றது.

சுசூகி ரைட் கனெக்ட்

ரைட் கனெக்ட் (Ride Connect App) செயலியை பிரத்தியேகமாக வெளியிட்டுள்ள சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் 125சிசி ஸ்கூட்டர்களான ஆக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் என இரண்டிலும் கொடுத்துள்ள டிஜிட்டல் கன்சோலில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மூலமாக ஸ்மார்ட்போனை இணைக்கும் நுட்பத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த டிஜிட்டல் கன்சோல் வாயிலாக இணைப்பதன் மூலமாக ரைடிங் சமயத்தில் நமது மொபைல் எண்ணுக்கு வருகின்ற அழைப்புகள், எஸ்எம்எஸ், வாட்ஸ்ஆப் செய்திகளை இங்கே பார்க்கலாம். இந்த கன்சோலில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், மிஸ்டூ கால் அலெர்ட், மொபைல் பேட்டரி இருப்பு, அதிகபட்ச வேக எச்சரிக்கையை அறிந்து கொள்ளலாம்.

ரைட் கனெக்ட் ஆப் மூலமாக ஸ்கூட்டரின் ஓடோமீட்டர், ட்ரீப் மீட்டர் உள்ளிட்ட வசதிகளை பெறுவதுடன் சர்வீஸ் ரிமைன்டரை பெறலாம். இந்த ஆப் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட மொபைல்களுக்கு கிடைக்க துவங்கியுள்ளது.

புதிய ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் அப்ரான் புதுப்பிக்கப்பட்டு எல்இடி டிஆர்எல் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி புதிய நிறங்கள் இணைக்கப்பட்டுள்ளது. சாதரண வேரிண்டை விட ரூ.3800 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.

Burgman Street: ரூ. 84,600

Access 125 (Drum/Alloys): ரூ. 77,700

Access 125 (Disc/Alloys): ரூ. 78,600

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)

Models/ Variants

Suzuki Ride Connect

மற்றவை

வித்தியாசம்

Suzuki Access 125 (Drum/Alloys)

ரூ. 77,700

ரூ. 73,900

ரூ. 3,800

Suzuki Access 125 (Disc/Alloys)

ரூ. 78,600

ரூ.74,800

ரூ. 3,800

Suzuki Burgman Street

ரூ. 84,600

ரூ. 81,100

ரூ. 3,500

 

முதற்கட்டமாக ஸ்கூட்டர்களில் இந்த டிஜிட்டல் கன்சோல் இணைக்கப்பட்டுள்ளதால், அடுத்தப்படியாக தனது ஜிக்ஸர் வரிசை பைக்குகளில் கூடுதல் வசதிகளுடன் ரைட் கனெக்ட் செயல்பாட்டை சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இணைக்க வாய்ப்புள்ளது.

Web Title : Suzuki Access 125, Burgman Street updated with Ride connect Bluetooth enabled digital console

Tags: Suzuki Access 125Suzuki Burgman street
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version