இந்தியாவின் முதல் 125cc ஸ்கூட்டர் மாடலான சுசூகி ஆக்சஸ் 125 வெற்றிகரமாக 50,00,000 உற்பத்தி இலக்கை கடந்த சாதனை படைத்துள்ளது. 2007 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆக்சஸ் மிகவும் நம்பகமான பலதரப்பட்ட மக்களின் முக்கியமான ஸ்கூட்டராக விளங்கி வருகின்றது.
சுசூகி நிறுவனம் 50 இலட்சம் உற்பத்தி இலக்கை அடைய கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் எடுத்துக் கொண்டுள்ளது. ஹரியானாவின் குருகிராமில் அமைந்துள்ள அதன் கெர்கி தௌலா ஆலையில் இருந்து 5 மில்லியன் சுஸுகி அக்சஸ் 125 தயாரிக்கப்பட்டுள்ளது.
2023 சுசூகி ஆக்சஸ் 125 ஆனது OBD-2 மற்றும் E20 மேம்பாடு பெற்றதாக 6,750 rpm-ல் அதிகபட்சமாக 8.5 bhp பவர், 5,500 rpm-ல் 10 Nm டார்க் வழங்கும் 124cc, ஏர்-கூல்டு இன்ஜின் மூலம் தொடர்ந்து இயக்கப்படுகிறது.
சாதனை குறித்து கருத்து தெரிவித்த , சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிர்வாக இயக்குனர் கெனிச்சி உமேடா, “சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் முக்கிய மைல்கல் சாதனை நிகழ்த்தியுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் எங்களது ஆக்சஸ் 125 மீதான எங்கள் அர்ப்பணிப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
இந்த குறிப்பிடத்தக்க சாதனையை அடைவதில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள், டீலர்கள், கூட்டாளிகள் மற்றும் எங்கள் சக ஊழியர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என குறிப்பிட்டார்.
சந்தையில் கிடைக்கின்ற ஆக்சஸ் 125, இந்திய வாடிக்கையாளர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட வசதியான அம்சங்களுடன் கிடைக்கின்றது.