சைபர் தாக்குதலால் சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா உற்பத்தி நிறுத்தம்

2023 suzuki

சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தில் சைபர் தாக்குதல் நடந்திருப்பதனால், கடந்த மே 10, 2023 முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உற்பத்தி நிறுத்தம் காரணமாக 20,000 எண்ணிக்கையிலான இருசக்கர வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Cyber-Attack

சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா செய்தித் தொடர்பாளர், “இந்தச் சம்பவம் குறித்து நாங்கள்  உடனடியாக சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறைக்கு தகவலை தெரிவித்துள்ளோம். இந்த விவகாரம் தற்போது விசாரணையில் உள்ளது, மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக, தற்பொழுது கூடுதல் விவரங்களை எங்களால் வழங்க முடியவில்லை.என ஆட்டோகார் புரோ தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

செய்தித் தொடர்பாளர் தாக்குதலின் நோக்கம் மற்றும் உற்பத்தி மீண்டும் எப்பொழுது துவங்கும் என்பதையோ குறிப்பிடவில்லை. அடுத்த சில நாட்களில் ஆலை மீண்டும் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுசுகி மோட்டார்சைக்கிள் FY23-ல் நாட்டின் ஐந்தாவது பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளராக உள்ள நிலையில், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்துள்ளது.

source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *