ஜப்பானை சேர்ந்த ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான சுசூகி நிறுவனம் அமெரிகாவில் விற்பனை செய்த சுசூகி வி-ஸ்ட்ரோம் 650, ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 & ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 மோட்டார் சைக்கிள்களை திரும்ப பெறுகிறது. மொத்தமாக 6928 மோட்டார் சைக்கிள் இந்த நடவடிக்கை மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள்களில் ஏற்பட்டுள்ள பெட்ரோல் பம்ப் o-ரிங் சேதமடைந்துள்ளதை தொடர்ந்து, இதை மாற்றவே திரும்ப பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 2017 மற்றும் 2018ம் ஆண்டு மாடல்களான வி-ஸ்ட்ரோம் 650, ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 & ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 மோட்டார் சைக்கிள் மட்டுமே திரும்ப பெறப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள்களை திரும்ப பெறும் நடவடிக்கைகளை டீலர்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளனர் என்றும், வாகன உரிமையாளர்கள் சுசூகி மோட்டார் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் இந்தியாவில் இந்த திரும்ப பெறும் நடவடிக்கை எப்போது தொடங்கும் என்பது குறித்து, சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிட்டவில்லை.