Automobile Tamilan

அதிக ரேஞ்ச் தரும் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் சிறப்புகள் – முழு விபரம் !!

longest range electric scooters list 2024

இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அதிக ரேஞ்ச் தருகின்ற 5 மாடல்களின் பேட்டரி, நுட்பவிபரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

குறிப்பாக சந்தையில் பிரசத்தி பெற்று நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்கின்ற மாடல்களின் அடிப்படையில் பயன்ரகளிடம் இருந்து பெறப்பட்ட புள்ளிவிபரங்களின் படி இந்த தகவலை தொகுத்து வழங்கியுள்ளேன்.

1. Ola S1 Pro

இந்தியாவின் முதன்மையான ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் S1 Pro வேரியண்ட் அதிகபட்சமாக 195 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் நிகழ்நேரத்தில் உண்மையான பயணிக்கும் ரேஞ்ச்  ஈக்கோ மோடில் 140-150 கிமீ வரை வழங்குகின்றது. இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற மாடலாக உள்ள எஸ் 1 புரோ ஆன் ரோடு விலை ரூ.1.47 லட்சம் ஆக உள்ளது.

6.5 மணி நேரம் சார்ஜிங் நேரம் எடுத்துக் கொள்ளும் 4Kwh லித்தியம் ஐயன் பேட்டரி கொண்ட S1 Pro மாடல் அதிகபட்சமாக 11Kw பவர், டாப் ஸ்பீடு 120kmph ஆக உள்ளது.  எஸ்1 புரோ தவிர இந்நிறுவனம் எஸ்1 ஏர் மற்றும் எஸ்1எக்ஸ் ஆகிய மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

2. Ather 450X

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் ஸ்போர்ட்டிவ் தன்மையை பெற்ற ஏதெர் 450X மாடலில் 3.7 kWh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு 6.4 kW பவரை வெளிப்படுத்தி அதிகபட்சமாக 26 Nm டார்க் வழங்குகின்றது. அதிகபட்சமாக 147 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் நிகழ்நேரத்தில் உண்மையான பயணிக்கும் ரேஞ்ச்  ஈக்கோ மோடில் 120 கிமீ வரை வழங்குகின்றது.

100 சதவிகிதம் சார்ஜ் நேரம் ஐந்து மணிநேரம் 40 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுகின்ற ஏத்தர் 450எக்ஸ் ஆன்ரோடு விலை ரூ.1.44 லட்சம் முதல் ரூ.1.72 லட்சம் வரை கிடைக்கின்றது.

3. 2024 Bajaj Chetak

பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் பிரீமியம் வேரியண்ட் ஆனது சிங்கிள் சார்ஜில் 80-105 கிமீ வரையிலான ரேஞ்ச் வழங்குகின்றது. ரெட்ரோ ஸ்டைல் பெற்று ஸ்டீல் பாடி கொண்ட இந்த மாடலில் .2kWh பேட்டரி பெற்று அதிகபட்சமாக 126 KM ரேஞ்ச் வழங்கும் என IDC சான்றியளிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் டாப் ஸ்பீடு 73km/hr ஆகும்.

பஜாஜின் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.1.26 லட்சம் முதல் ரூ.1.56 லட்சம் வரை உள்ளது.

4. Hero Vida V1 Pro

ஹீரோ நிறுவனத்தின் வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வி1 புரோ  3.94kWh பேட்டரி பெற்று உண்மையான ரைடிங் ரேஞ்சு 95-105 கிமீ வரை வழங்குகின்றது.  Eco, Ride, Sport மற்றும் கஸ்டம் என நான்கு விதமான ரைடிங் முறைகளுடன் அதிகபட்சமாக 80kmph வேகத்தை வழங்குகிறது.

ஹீரோ விடா வி1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ரூ.1.56 லட்சம் ஆகும்.

5. TVS iqube

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற இரண்டாவது மின்சார ஸ்கூட்டர் மாடலான ஐக்யூப் ஆன் ரோடு விலை ரூ.1,35,157 முதல் ரூ.1,40,760 வரை உள்ளது. 3.04Kwh பேட்டரியை பெற்றுள்ள ஈக்கோ மோடில் 70 முதல் 90 Km ரேஞ்சு வழங்கும் நிலையில் டாப் ஸ்பீடு மணிக்கு 78 கிமீ ஆகும்.

650 வாட்ஸ் சார்ஜர் கொண்டு 0-80 % சார்ஜ் செய்ய 4 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும்.

சுருக்கமாக அட்டவனையில் அறியலாம்,

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரைடிங் ரேஞ்ச்
ஓலா S1 Pro 150 கிமீ
ஏதெர் 450X 120 கிமீ
பஜாஜ் சேட்டக் 110 கிமீ
ஹீரோ விடா வி1 105கிமீ
டிவிஎஸ் ஐக்யூப் 90 கிமீ

 

Exit mobile version