Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவில் டிரையம்ப் டேடோனா 660 பைக்கின் அறிமுக விபரம்

by MR.Durai
12 February 2024, 7:32 am
in Bike News
0
ShareTweetSend

Triumph Daytona 660 india launch confirmed

டிரையம்ப் வெளியிட்ட ஃபேரிங் ஸ்டைல் ஸ்போர்ட்டிவ் டேடோனா 660 (Triumph Daytona 660) பைக்கின் முக்கிய விபரங்களை தனது இந்திய இணையதள பக்கத்தில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளதால் அடுத்த சில வாரங்களுக்குள் விலை அறிவிக்கப்படலாம்.

டிரையம்ப் வெளியிட்ட ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் அமோக வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், பரவலாக தனது பிரீமியம் மாடல்களின் எண்ணிக்கையை இந்திய சந்தையில் உயர்த்தி வருகின்றது. சமீபத்தில் ஐரோப்பா சந்தையில் வெளியிடப்பட்ட டேடோனாவின் 660 விலை EUR 10,045 (தோராயமாக Rs. 8.98 லட்சம் ) அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய சந்தைக்கு வரும் பொழுது ரூ.10 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கின்றோம்.

புதிய ஸ்போர்ட்டிவ் டிரையம்ப் டேடோனா 660 மாடலில் 660cc மூன்று சிலிண்டர் இயந்திரம் அதிகபட்சமாக 11,250rpmல் 95bhp மற்றும் 8,250rpmல் 69Nm வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பைக்கில் ஸ்போர்ட், ரோடு மற்றும் ரெயின் என மூன்று விதமான சவாரி முறைகளுடன் வருகிறது.

மிக நேர்த்தியான ஃபேரிங் பேனல்கள் சேர்க்கப்பட்டு வெள்ளை உடன் கருப்பு, கிரானைட் உடன் கருப்பு மற்றும் சிவப்பு உடன் கருப்பு என மூன்று நிறங்களை பெற்று 110 மிமீ பயணிக்கின்ற 41 மிமீ ஷோவா அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் ப்ரீ லோட் ஷோவா மோனோஷாக் கொண்டதாக விளங்குகின்றது.

பிரேக்கிங் அமைப்பில் முன்புற டயருக்கு இரட்டை 310 மிமீ டிஸ்க்குகள் மற்றும் ஒற்றை 220 மிமீ டிஸ்க் பின்புறத்தில் இணைக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றதாகவும், 120/70 ZR 17 முன் மற்றும் 180/55 ZR 17 பின்புற டயரை பெற்று 17 அங்குல அலாய் கொண்டுள்ளது.

அடுத்த சில வாரங்களுக்குள் புதிய டிரையம்ப் டேடோனாவின் 660 விலை அறிவிக்கப்பட உள்ளது.

Triumph Daytona 660 india launch confirmed
triumph daytona 660
Triumph Daytona 660 bike
triumph daytona 660
triumph daytona 660 tft instrument cluster
Triumph-Daytona-660-Teaser

Related Motor News

புதிய நிறத்தில் டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400X வெளியானது

₹ 2.17 லட்சத்தில் டிரையம்ப் ஸ்பீடு T4 அறிமுகமானது

2024 டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் விற்பனைக்கு வெளியானது

செப்டம்பர் 17-ல் புதிய ட்ரையம்ப் 400சிசி பைக் அறிமுகம்

ட்ரையம்ப் Daytona 660 பைக் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் டேடோனா 660 பைக்கினை வெளியிடும் டிரையம்ப்

Tags: TriumphTriumph Daytona 660
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ.1.99 லட்சத்தில் 2025 கீவே RR 300 விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.1.99 லட்சத்தில் 2025 கீவே RR 300 விற்பனைக்கு அறிமுகமானது

ather 450 apex

BAAS திட்டம் வந்தால் ஏதெர் எனர்ஜியின் ஸ்கூட்டர் விலை குறையுமா ?

ஹோண்டா ஷைன் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் எப்பொழுது.?

2025 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 விற்பனைக்கு அறிமுகமானது

குறைந்த விலை லைவ்வயர் எலக்ட்ரிக் கான்செபட் அறிமுகமானது

ரூ1.26 லட்சத்தில் ஏப்ரிலியா SR175 ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது

ஜூலை 17 ., கைனடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகம்.!

ரூ.1.52 லட்சத்தில் FZ-X மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை வெளியிட்ட யமஹா

ஹீரோ விடா VX2 Go போட்டியாளர்கள் யார்? விலை, ரேஞ்சு, சிறப்புகள்.!

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

அடுத்த செய்திகள்

மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி eவிட்டாரா அறிமுகமானது

செப்டம்பர் 3., மாருதி சுசூகியின் இ-விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்.!

Range Rover Velar Autobiography

ரூ.89.90 லட்சத்தில் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆட்டோபையோகிராபி வெளியானது

எஸ்யூவி பிரிவில் மிக விரைவாக 6 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த டாடா பஞ்ச்

எஸ்யூவி பிரிவில் மிக விரைவாக 6 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த டாடா பஞ்ச்

mg m9 electric mpv

சொகுசான பயணத்துக்கு எம்ஜி M9 விலை ஜூலை 21 வெளியாகும்

2025 BMW 2 Series Gran Coupe car

இந்தியாவில் ரூ.46.90 லட்சத்தில் புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே அறிமுகம்

ரூ.1.99 லட்சத்தில் 2025 கீவே RR 300 விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.1.99 லட்சத்தில் 2025 கீவே RR 300 விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan