பஜாஜ்-ட்ரையம்ப் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள ட்ரையம்ப் ஸ்பீட் 400 Vs ட்ரையம்ப் ஸ்கிராம்பளர் 400 X என இரு பைக்குகளுக்கும் இடையிலான வித்தியாசங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஸ்பீடு ட்வின் 900 பைக்கின் தோற்ற உந்துதலில் ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்றுள்ள ட்ரையம்ப் ஸ்பீட் 400 மாடலும், ஸ்கிராம்பளர் 900 மாடலின் ஸ்டைலை பெற்ற ட்ரையம்ப் ஸ்கிராம்பளர் 400 X என இரண்டும் ஒரே லிக்யூடு கூல்டு 398.15cc என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது.
Triumph Speed 400 Vs Triumph Scrambler 400 X
ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்பீட் 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக்கில் ரைடு-பை-வயர் மற்றும் ஸ்விட்ச் ஆஃப் செய்யக்கூடிய டிராக்ஷன் கட்டுப்பாடு உள்ளது. டிஸ்ப்ளேவில் ஒருங்கிணைந்த எல்சிடி டிஸ்ப்ளே கியர் மற்றும் ஃப்யூல் கேஜிற்கான வசதி செயல்பாட்டு மற்றும் படிக்க எளிதாக இருக்க வேண்டும். அனைத்தும் எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.
| என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் Speed 400/ Scrambler 400x | ||
| வகை |
Liquid-cooled, 4 valve, DOHC, single-cylinder, FI |
|
| Capacity |
398.15 cc |
|
| Bore x Stroke |
89.0 mm x 64.0 mm |
|
| Compression |
12:1 |
|
| அதிகபட்ச பவர் |
40 PS / 39.5 bhp (29.4 kW) @ 8,000 rpm |
|
| அதிகபட்ச டார்க் |
37.5 Nm @ 6,500 rpm |
|
| கிளட்ச் |
வெட் மல்டிபிள் கிளட்ச் |
|
| கியர்பாக்ஸ் |
6 ஸ்பீடு சிலிப்பர் அசிஸ்ட் |
|
சஸ்பென்ஷன், டயர், பிரேக் – ஒப்பீடு
ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக்கில் ஆன்-ரோடு மற்றும் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு இரு விதமான பயன்பாடிற்கு ஏற்றதாக டயர், சஸ்பென்ஷன் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி, பிரேக்கிங் அமைப்பில் கூட வித்தியாசத்தை பெற்றுக் கொள்ளுகின்றது.
| Speed 400 Vs Scrambler 400 X | ||
| சேஸ் |
ஹைப்ரிட் ஸ்பைன்/பெரிமீட்டர், டியூபுலர் ஸ்டீல், போல்ட்-ஆன் ரியர் சப்ஃப்ரேம் |
|
| ஸ்விங் ஆர்ம் |
இரட்டை பக்க, கேஸ்ட் அலுமினிய அலாய் |
|
| முன்பக்க வீல் | கேஸ்ட் அலுமினிய அலாய்
10 ஸ்போக், 17 x 3 in |
கேஸ்ட் அலுமினிய அலாய்
10 ஸ்போக் 19 x 2.5 in |
| பின்பக்க வீல் | கேஸ்ட் அலுமினிய அலாய்
10 ஸ்போக், 17 x 4 in |
கேஸ்ட் அலுமினிய அலாய்
10 ஸ்போக், 17 x 3.5 in |
| டயர் | Metzeler Sportec M9RR | Metzeler Karoo Street |
| முன்புற டயர் | 110/70 R17 | 100/90 R19 |
| பின்புற டயர் | 150/60 R17 | 140/80 R17 |
| முன்புற
சஸ்பென்ஷன் |
43mm அப் சைடு டவுன் ஃபோர்க் 140mm wheel travel |
43mm அப் சைடு டவுன் ஃபோர்க் 150mm wheel travel |
| பின்புற
சஸ்பென்ஷன் |
மோனோஷாக் ப்ரீ லோட் அட்ஜெஸ்ட் 130mm wheel travel |
மோனோஷாக் ப்ரீ லோட் அட்ஜெஸ்ட் 150mm wheel travel |
| முன்புற பிரேக் | 300mm டிஸ்க் 4 பிஸ்டன் ரேடியல் காலிப்பர், ABS |
320mm டிஸ்க்
4 பிஸ்டன் ரேடியல் காலிப்பர், ABS |
| பின்புற பிரேக் | 230mm டிஸ்க் ஃபுளோட்டிங் காலிப்பர், ABS | 230mm டிஸ்க் ஃபுளோட்டிங் காலிப்பர், ABS |
பரிமாணங்கள் ஒப்பீடு
ட்ரையம்ப் ஸ்பீட் 400 பைக்கினை விட ட்ரையம்ப் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் மாடல் என இரண்டும் மாறுபட்ட அளவுகளை பெற்றுள்ளது.
| Specs | Triumph Speed 400 | Scrambler 400x |
| எடை | 170 Kg | 179 Kg |
| இருக்கை உயரம் | 790mm | 835mm |
| கிரவுண்ட் கிளியரன்ஸ் | – | – |
| நீளம் | 2,056mm | 2,117mm |
| அகலம் | 795mm | 825mm |
| உயரம் | 1,075mm | 1,190mm |
| வீல் பேஸ் | 1,377mm | 1,418mm |
இந்தியாவில் ஜூலை 5 ஆம் தேதி ட்ரையம்ப் ஸ்பீட் 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400x பைக்கின் விலை அறிவிக்கப்படலாம். இரு பைக்குகளின் விலை ரூ. 3.00 லட்சம் முதல் ரூ. 3.50 லட்சத்திற்குள் துவங்கலாம்.

