Skip to content

புதிய டிரையம்ப் ஸ்பீடு 400 டெலிவரிக்கு தயாரானது

Triumph speed 400 on-road price

ராயல் என்ஃபீல்டுக்கு சவால் விடுக்கும் வகையில் வந்துள்ள டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், ஆகஸ்ட் முதல் வாரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்றுள்ள ஸ்பீடு 400 பைக்கின் விலை ரூ.2.33 லட்சத்தில் வெளியிடப்பட்டதால், முதற்கட்ட சலுகையாக 10,000 வாடிக்கையாள்களுக்கு ரூ.2.23 லட்சத்தில் கிடைத்தது. இந்நிலையில், டிரையம்ப் 15,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது.

Triumph Speed 400

புதிய TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ட்ரையம்ப் ஸ்பீட் 400 பைக்கின் மைலேஜ் 30 Kmpl வழங்கும்.

ஆரம்பத்தில் முன்பதிவு கட்டணம் ரூ.2,000 ஆக வசூலிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்பீட் 400 மோட்டார்சைக்கிள் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் சென்னை விலை ₹ 2,77,619 ஆகும்.

இந்த மாடலுக்கு போட்டியாக ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440, ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, மீட்டியோர் 350,  ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகள், ஹோண்டா சிபி 350, ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.