டிரையம்ப் மற்றும் பஜாஜ் ஆட்டோ கூட்டணியில் தயாரான 400சிசி பைக் வரிசையில் கூடுதலாக ஸ்பீடு 400 கஃபே ரேசர் அல்லது திரக்ஸ்டன் 400 விற்பனைக்கு ஆகஸ்ட் 6, 2025 அன்றைக்கு வரவுள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே டிரையம்ப் நிறுவனம் ஸ்பீடு 400, ஸ்பீடு 400 T4, ஸ்கிராம்பளர் 400X, ஸ்கிராம்பளர் 400XC என நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.
Triumph Thruxton 400
புதிய திரக்ஸ்டன் 400ல் கஃபே ரேசர் ஸ்டைலை பெற்று TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
ஸ்பீடு 400 பைக்கிலிருந்து பெரும்பாலான மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களை பகிர்ந்து கொள்ளுகின்ற திரக்ஸ்டனில் செமி ஃபேரிங் பேனலை பெற்று கிளிப்-ஆன் ஹேண்டில் பார் மற்றும் பின்புறத்தில் சற்று தள்ளி வைக்கப்பட்ட ஃபூட் பெக்டன் பல்வேறு மாறுபட்ட நிறங்களை பெற்றதாக விளங்க உள்ளது.
புதிய திரக்ஸ்டன் 400 பைக்கின் விலை ரூ.2.50 லட்சத்துக்கும் கூடுதலான விலையில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.