டிரையம்ப் மற்றும் பஜாஜ் கூட்டணியில் புதிதாக 400சிசி பிரிவில் 400 கஃபே ரேசர் ஸ்டைலை கொண்ட மாடல் ரூபாய் 2,74,137 எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. முன்பாக 400cc பிரிவில் ஸ்பீடு 400, ஸ்பீடு T4, ஸ்கிராம்பளர் 400X, மற்றும் ஸ்கிராம்பளர் 400XC ஆகியவற்றை கொண்டுள்ளது.
Triumph Thruxton 400
செமி ஃபேரிங் பேனல்களுடன் மிக நேர்த்தியாக அமைந்துள்ள திரக்ஸ்டன் 400ல் மிகவும் கவர்ச்சிகரமான பாடி கிராபிக்ஸ் உடன் மஞ்சள், சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு என நான்கு நிறங்களுடன் கிளிப்-ஆன் பார்கள், பார்-எண்ட் கண்ணாடிகள் போன்றவற்றுடன் பின்புறத்தில் மெலிதான ஃபெண்டர் மற்றும் புதிய டெயில்லைட் அசெம்பிளி பெற்றுள்ளது.
மற்றபடி, வழக்கமாக ஸ்பீடு 400 பைக்கிலிருந்து பெறப்பட்ட அப்சைடு டவுன் ஃபோர்க் சஸ்பென்ஷனுடன் பிரேக்கிங் அமைப்பில் டிஸ்க் ஆப்ஷனுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டு பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் உள்ளது.
தொடர்ந்து 398cc TR எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், ஸ்பீடு 400 மாடலை விட 2Hp வரை கூடுதலான பவரை வெளிப்படுத்துவதனால் 9,000rpm-ல் 42hp பவர் மற்றும் டார்க் 37.5Nm ஆக 7,500rpm-ல் உள்ளது. தொடர்ந்து 6 வேக கியர்பாக்ஸூடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.
டிராக்ஷன் கண்ட்ரோல் பெற்று தொடர்ந்து டிஜி அனலாக் கிளஸ்ட்டரில் மாறுதல்கள் இல்லாமல் மற்ற 400சிசி டிரையம்ப் பைக்குகள் போலவே உள்ளது.