Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

அப்பாச்சி 160 : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் ஏபிஎஸ் பிரேக் அறிமுகம்

by automobiletamilan
February 13, 2019
in பைக் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

14ad6 2018 tvs apache rtr 160 4v side 1

அப்பாச்சி 160 பைக் : டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் கூடியதாக எஃப்ஐ மாடலில் மட்டும் ரூ.6,499 விலை உயர்த்தப்பட்டு ரூ. 99,645 விலையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. தற்சமயம் சாதாரன அப்பாச்சி 160 மாடலில் மட்டும் ஏபிஎஸ் இணைக்கப்படவில்லை.

அப்பாச்சி 160

பிரசத்தி பெற்ற அப்பாச்சி 160 பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டு முன்புற டயரில் 270 மிமீ டிஸ்க் மற்றும் 200 மிமீ டிஸ்க் கூடுதலாக 130 மிமீ கொண்ட டிரம் பிரேக் ஆப்ஷனலும் இணைக்கப்பட்டுள்ளது.

eedcb 2018 tvs apache rtr 160 4v red 1

அப்பாச்சி 160 4வி பைக்கில் 159.7cc எஞ்சினுடன் 4 வால்வுகளுடன் கார்புரேட்டர் மாடல் அதிகபட்சமாக 16.5hp பவர் மற்றும் 14.8 Nm டார் க் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது. மேலும் ஆயில் கூலிங் அம்சத்துடன் கூடிய அப்பாச்சி 160 பைக்கில் 159.7cc எஞ்சினுடன் 4 வால்வுகளுடன் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் மாடல் அதிகபட்சமாக 16.8hp பவர் மற்றும் 14.8 Nm டார்க் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது.  இரு மாடல்களும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

முதற்கட்டமாக டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI மற்றும் கார்புரேட்டர் பொருத்தப்பட்ட மாடலில் மட்டும் ஒற்றை சேனல் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. முந்தைய டிவிஎஸ் அப்பாச்சி 160 மாடலில் ஏபிஎஸ் இணைகப்படவில்லை. வருகின்ற ஏப்ரல் 1 முதல் இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட வேண்டும்.

8b1ba tvs apache rtr 160 engine 17863 tvs apache 160 4v headlight

யமஹா FZ-S FI, ஹோண்டா ஹார்னெட் 160R, பஜாஜ் பல்சர் 160NS, மற்றும் பிரபலமான சுஸூகி ஜிக்ஸெர் மற்றும் ஹோண்டா எக்ஸ்-பிளேடு ஆகியவற்றுடன் போட்டியிடும் வகையில் விளங்குகின்றது.

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கின் விலை ரூ.99,645 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விலை ரூ. 92,645 (விற்பனையக விலை சென்னை) ஆகும். சமீபத்தில் இந்நிறுவனம் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கில் கார்கில் எடிஷன் மாடலை வெளியிட்டுள்ளது.

4350c 2018 tvs apache rtr 160 4v blue 1

Tags: TVSTVS ApacheTVS Apache RTR 160 4Vடிவிஎஸ் அப்பாச்சிடிவிஎஸ் அப்பாச்சி 160
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan