டிவிஎஸ் ரேஸ் பெர்ஃபாமென்ஸ் (Race Performance) பிராண்டில் முதல் மாடலாக வந்துள்ள அப்பாச்சி RTR 165 RP பைக்கில் சக்திவாய்ந்த என்ஜின், சிறப்பான பாடி கிராபிக்ஸ் பெற்றுள்ள மாடலின் விலை ரூ.1.45 லட்சம் ஆக நிர்னையிக்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாற்றியமைக்கப்பட்ட போர் மற்றும் ஸ்ட்ரோக் விகிதம் கொண்டுள்ளது. RP பதிப்பில் 164.9 சிசி, சிங்கிள் சிலிண்டர், நான்கு வால்வு என்ஜின் மூலம் இயக்கப்பட்டு 10,000 ஆர்பிஎம்மில் 18.9 BHP ஆற்றலையும், 8,750 ஆர்பிஎம்மில் 14.2 NM முறுக்குவிசையை வழங்குகின்றது. இந்த மோட்டார்சைக்கிளில் புதிய சிலிண்டர் ஹெட் சேர்க்கப்பட்ட 35 சதவீதம் அதிகரிப்பு மற்றும் இரட்டை எலக்ட்ராடு ஸ்பார்க் பிளக் கொண்டு 15 சதவீதம் பெரிய வால்வுகளையும் பெறுகிறது.
புதிய அப்பாச்சி RTR 165 RP பைக்கில் ரேஸ்-டியூன் செய்யப்பட்ட 5 வேக கியர்பாக்ஸுடன் ஸ்லிப்பர் கிளட்ச், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள், அனைத்து புதிய டிவிஎஸ் ரேசிங் டீக்கால்கள், சிவப்பு அலாய் வீல்கள் மற்றும் புதிய இருக்கை வடிவத்தையும் கொண்டுள்ளது. மேலும், பிரேக்கிங் செயல்திறனை சிறப்பாக வழங்க இந்த மாடலில் முதல் 240 மிமீ பின்புற டிஸ்க் பிரேக்கைப் பெற்றுள்ளது.
அப்பாச்சி RTR 165 RP பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 123 கிமீ ஆகும்.
முன்புறத்தில் 17-இன்ச் சக்கரங்கள் 90/90-பிரிவு டயர் மற்றும் 130/70-பிரிவு பின்புற டயருடன் இணைக்கப்பட்டு, பிரேக்கிங் 270 மிமீ டிஸ்க் மற்றும் 240 மிமீ பின்புற டிஸ்க் உடன் ஒற்றை சேனல் ஏபிஎஸ் அமைப்பு மூலம் கையாளப்படுகிறது.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 165 ஆர்பி விலை ரூ.1.45 லட்சம், அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி ரூ 1.21 லட்சம் மற்றும் டாப்-ஸ்பெக் வேரியன்ட் ரூ. 1.39 லட்சம் ஆகும். ஆனால், மொத்தம் 200 யூனிட்டுகள் மட்டும் அப்பாச்சி 165 ஆர்பி கிடைக்கும்.