டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐக்யூப் விலை ₹ 11,500 வரை உயர்த்தப்பட்டு விற்பனைக்கு இப்பொழுது ₹ 1,23,382 முதல் ₹ 1,32,822 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் மற்ற மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பாளர்கள் சார்ஜர் மற்றும் மென்பொருள் மேம்பாடு தொடர்பான FAME-2 திட்டத்தின் கீழ் அரசு மேற்கொண்ட ஒழுங்குமுறை நடவடிக்கையால் ஓலா, விடா மற்றும் ஏதெர் உள்ளிட்ட நிறுவனங்கள் விலை குறைத்துள்ள நிலையில் டிவிஎஸ் நிறுவனம் விலையை உயர்த்தியுள்ளது.

2023 TVS iQube Electric

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஐக்யூப் ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு 650-வாட் சார்ஜரின் விலையை ஸ்கூட்டரின் விலையுடன் சேர்த்துள்ளது. எனவே iQube இப்போது ரூ. 1.68 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், FAME-II மானியம் தவிர்த்து) விலையில் உள்ளது. இந்திய அரசு எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு 51,000 ரூபாய் மானியம் வழங்குகின்றது.

டிவிஎஸ் நிறுவனம் iQube S வேரியண்டில் மென்பொருள் மேம்படுத்தலுக்கு’ கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றது. இது ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை உடன் ரூ.9,440 கூடுதலாக வசூலிக்கப்படுகின்றது. ஆனால் பேஸ் வேரியண்டில் மென்பொருள் மேம்பாடு கட்டணம் இல்லை.

புதிய டிவிஎஸ் ஐக்யூப்  தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல்

TVS iQube S – ₹ 1,32,822

TVS iQube S – ₹ 1,23,382

iQube Specification iQube iQube S
Battery pack 3.04 kWh 3.04 kWh
Top Speed 78 km/h 78 km/h
Range (IDC claimed) 100 km 100 km
Real Driving Range 75 km 80 km
Riding modes Eco, Power Eco, Power

விஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஐக்யூப் மாடல் iQube S மற்றும் iQube என இரு விதமாக கிடைக்கின்றது. இந்த மாடலில் பொதுவாக 3.04 KWh லித்தியம் ஐயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

ஐக்யூப் சிங்கிள் சார்ஜில் ஈக்கோ மோடில் 100 கிமீ வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்நேரத்தில் முழுமையான சார்ஜில் 75-80 கிமீ வரை வழங்கும்.