Automobile Tamilan

அதிக விலையில் ஐக்யூப்.., குறைந்த விலை போட்டியாளர்கள்.. எந்த இ-ஸ்கூட்டர் பெஸ்ட்..?

tvs iqube vs rivals

குறைந்த விலையில் பல்வேறு வசதிகள் வழங்குகின்ற போட்டியாளர்களை விட அதிக விலையில் வசதிகள் மற்றும் ரேஞ்ச் வழங்குகின்ற டிவிஎஸ் ஐக்யூப் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு எந்த மாடல் சிறப்பானது என்பதை எல்லாம் தொடர்ந்து இப்பொழுது பார்க்கப் போகின்றோம்.

இந்திய சந்தையில் டிவிஎஸ் ஐக்யூபிற்கு போட்டியாக ஏதெர் ரிஸ்டா, ஆம்பியர் நெக்சஸ், பஜாஜ் சேட்டக், ஓலா S1X, S1 ஏர், மற்றும் S1 pro, ஹீரோ வீடா உள்ளிட்ட மாடல்களுடன் பல்வேறு சிறிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களும் உள்ளனர்.

மேலும் படிக்க  –  குடும்பத்திற்கு ஏற்ற சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

டிவிஎஸ் ஐக்யூப் ரேஞ்ச் Vs போட்டியாளர்கள்

தயாரிப்பாளர் பேட்டரி, ரேஞ்ச், சார்ஜிங், டாப் ஸ்பீடு
TVS iqube 2.2kwh பேட்டரி –  2.2 Kwh, IDC ரேஞ்ச் – 75km/charge , உண்மையான ரேஞ்ச் – 65-70 km, அதிகட்ச வேகம் – 75km/hr  சார்ஜிங் நேரம் (0-80%) – 2 hrs
TVS iqube 3.4kwh, ST 3.4kwh பேட்டரி –  3.4 Kwh, IDC ரேஞ்ச் – 100km/charge , உண்மையான ரேஞ்ச் – 90-95 km, அதிகட்ச வேகம் – 78km/hr  சார்ஜிங் நேரம் (0-80%) – 4 hr 30 min
TVS iqube 5.1kwh பேட்டரி –  5.1 Kwh, IDC ரேஞ்ச் – 150km/charge , உண்மையான ரேஞ்ச் – 140-145 km, அதிகட்ச வேகம் – 82km/hr  சார்ஜிங் நேரம் (0-80%) – 4 hr 18 min
Ather Rizta (S,Z) பேட்டரி –  2.9 Kwh, IDC ரேஞ்ச் – 123km/charge , உண்மையான ரேஞ்ச் –  90-100 km, அதிகட்ச வேகம் – 80km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 8 hr 30 min
Ather Rizta Z பேட்டரி –  3.7 Kwh, IDC ரேஞ்ச் – 160km/charge , உண்மையான ரேஞ்ச் – 125-135 km, அதிகட்ச வேகம் – 80km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 6 hr 10 min
Ampere Nexus பேட்டரி –  3 Kwh, CVMR ரேஞ்ச் – 136km/charge , உண்மையான ரேஞ்ச் –  95-105 km, அதிகட்ச வேகம் – 93km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 3 hr 22 min
Ola S1X 2kwh பேட்டரி –  2 Kwh, IDC ரேஞ்ச் – 95km/charge , உண்மையான ரேஞ்ச் – 70-75 km, அதிகட்ச வேகம் – 85km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 7 hr 40 min
Ola S1X 3kwh பேட்டரி –  3 Kwh, IDC ரேஞ்ச் – 143km/charge , உண்மையான ரேஞ்ச் – 110-115 km, அதிகட்ச வேகம் – 90km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 7 hr 40 min
Ola S1X 4kwh பேட்டரி –  4 Kwh, IDC ரேஞ்ச் – 190km/charge , உண்மையான ரேஞ்ச் – 140-150 km, அதிகட்ச வேகம் – 90km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 6 hr 50 min
2024 Bajaj Chetak Urbane பேட்டரி –  2.9 Kwh, IDC ரேஞ்ச் – 113km/charge , உண்மையான ரேஞ்ச் –  95-100 km, அதிகட்ச வேகம் – 73km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 4 hr 30 min
2024 Bajaj Chetak Premium பேட்டரி –  3.2 Kwh, IDC ரேஞ்ச் – 126km/charge , உண்மையான ரேஞ்ச் – 110-115 km, அதிகட்ச வேகம் – 73km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 4 hr 50 min
Ola S1 Pro பேட்டரி –  4 Kwh, IDC ரேஞ்ச் – 190km/charge , உண்மையான ரேஞ்ச் – 140-150 km, அதிகட்ச வேகம் – 120km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 6 hr 30 min
Ola S1 air பேட்டரி –  3 Kwh, IDC ரேஞ்ச் – 151km/charge , உண்மையான ரேஞ்ச் – 120-130 km, அதிகட்ச வேகம் – 90km/hr  சார்ஜிங் நேரம் (0-100%) – 5 hr

டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டரில் பல்வேறு வசதிகள் பெற்று இருந்தாலும் கூட போட்டியாளர்களுக்கு இணையான ஓலா மற்றும் ஏத்தர் ரிஸ்டா போன்ற மாடல்கள் பல்வேறு சிறப்பம்சங்களையும் கொண்டு இருக்கின்றது குறிப்பாக ஓலா S1 Pro மாடல் ஆனது ஐக்யூப் மாடலை விட மிகவும் குறைவான விலையில் அதிகபட்ச ரேஞ்சை வழங்கும் ஸ்கூட்டராகவும் அதே நேரத்தில் அதிகபட்ச டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிமீ கொண்ட மாடலாகவும் விளங்குகின்றது.

நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு மாடலான ரெட்ரோ ஸ்டைலை பெற்ற பஜாஜ் சேட்டக் மாடல் 110 கிலோ மீட்டருக்கும் கூடுதலான ரேஞ்சை வழங்குகின்றது.

போட்டியாளர்களை விட டிஜிட்டல் கிளஸ்ட்டர் மூலம் வழங்கப்படும் வசதிகள், 950W அடிப்படையான சார்ஜர் (3.4kwhல் 650W), கனெக்ட்டிவ் வசதிகளில் சிறப்பானதாகவே ஐக்யூப் உள்ளது. குறிப்பாக டிவிஎஸ் வெளியிட்டு ரேஞ்ச் என்பது ஏறக்குறைய உண்மையான ரேஞ்ச் ஆகும்.

ஐக்யூப் vs போட்டியாளர்கள் விலை ஒப்பீடு

குறிப்பாக டிவிஎஸ் நிறுவன குறைந்த விலை ஐக்யூப் 09 மாடலின் ஆன்ரோடு விலை ரூ.1.16 லட்சத்தில் துவங்குகின்றது. ஆனால் இதனை விட சிறப்பான ரேஞ்ச் வழங்குகின்ற ஓலா S1X குறைவான கனெக்ட்டிவ் வசதிகள் பெற்றிருதாலும் அதிக ரேஞ்ச் வழங்குவதுடன் ரூ.82,000 முதல் துவங்குகின்றது.

EMPS2024 மானியத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை தொகுக்கப்பட்டுள்ளது.

e-Scooter Price
TVS iQube ₹ 1,16,137 – ₹ 1,96,757
Ather Rizta ₹ 1,19,532- ₹1,54,543
Ampere Nexus ₹ 1,18,901- ₹1,28,985
Ola S1X ₹ 81,787 – ₹ 1,12,500
Bajaj Chetak ₹ 1,34,067 – ₹ 1,57,124
Ola S1 Air ₹ 1,21,056
Ola S1 Pro ₹ 1,47,543

(கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல்)

Exit mobile version