டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஜூபிடர் ஸ்கூட்டரில் எரிபொருளை சேமிக்கும் வகையிலான ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் நுட்ப்பத்தினை intelliGO என்ற பெயரில் ZX டிஸ்க் வேரியண்டின் அடிப்பையில் ரூ.76,270 ஆக விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
ஹீரோ மற்றும் ஹோண்டா என இரு நிறுவனங்களும் வழங்கி வருகின்ற ஸ்டார்ட் ஸ்டாப் டெக்னாலாஜி போன்ற நுட்பத்தை போலவே இன்டெல்லிகோ நுட்பத்தை டிவிஎஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கும் சமயங்களில் அதிகப்படியான காத்திருப்பு நரங்களில் தானாகவே என்ஜின் அனைந்து விடும், திராட்டிளை தொட்ட உடன் தானாகவே என்ஜின் இயங்க துவங்கும்.
பிஎஸ் 6 உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்க என்ஜினை புதுப்பிக்க ET-Fi (Ecothrust Fuel injection) தொழில்நுட்பத்துடன் 7.33 BHP மற்றும் 8.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.
சமீபத்தில் இந்நிறுவனம் குறைந்த விலை ஜூபிட்டர் எஸ்எம்டபிள்யூ வேரியண்ட்டை வெளியிட்டிருந்தது. இரு பக்க டயர்களில் 130 மிமீ டிரம் பிரேக் அல்லது 220 மிமீ டிஸ்க், கூடுதலாக சிங்க் பிரேக் டெக்னாலஜி சேர்க்கப்பட்டுள்ளது
ஜூபிடர் SMW – 67,420
ஜூபிடர் – ரூ.69,420
ஜூபிடர் ZX – ரூ.72,170
ஜூபிடர் ZX டிஸ்க் மற்றும் இன்டெல்லிகோ – ரூ.76,270
டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் விலை ரூ. 76,465
(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)