டிவிஎஸ் மோட்டார் கம்பெனி தொடங்கியுள்ள, முதல் மோட்டோ சோல் 2019 வாயிலாக ரைடிங் கியர் ஆக்சசெரீஸ்களை டிவிஎஸ் ரேசிங் பெர்ஃபாமென்ஸ் கியர் என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. அக்டோபர் 18-19 என இரு தினங்கள் அப்பாச்சி ரைடர்களின் சங்கமம் கோவாவில் மோட்டோ சோல் என்ற பெயரில் நடைபெற்று வருகின்றது.
மோட்டோ சோலின் முதல் பதிப்பில் கோவாவில் 2500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இது உலகெங்கிலும் உள்ள அப்பாச்சி உரிமையாளர் குழுக்களின் (ஏஓஜி) ஒரு சங்கமமாகும், இது புதிய சவாரி கியரை அறிமுகப்படுத்த சரியான தளமாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச கூட்டணி நிறுவனங்களுடன் இந்த கியர்களை உருவாக்குவதற்கு முன்பு நிறைய சந்தை ஆராய்ச்சி செய்துள்ளதாக டிவிஎஸ் குறிப்பிட்டுள்ளது. இப்போதைக்கு, இது இரண்டு விதமான செட் கியர்களை வழங்குகிறது. முதலாவது பாதுகாப்பு சவாரி கியர்களான ஜாக்கெட், பேன்ட், கையுறைகள் மற்றும் பூட்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஐ.எஸ்.ஐ மற்றும் ECE மூலம் அங்கீகரிக்கப்பட்ட முழு தலைக்கவசங்களை டி.வி.எஸ் வழங்குகிறது. அடுத்த விதமாக, நகர்ப்புற ஆடைகளாக டி-ஷர்ட்கள், பேன்ட் ஜாக்கெட்டுகள், பைகள், தொப்பிகள், சன்கிளாஸ்கள் மற்றும் காலணிகளை உள்ளடக்கிய விற்பனை செய்கின்றது.
இந்நிறுவனம், தற்போது அனைத்து டி.வி.எஸ் ஷோரூம்களிலும் கியரை விற்பனை செய்யும். கூடுதலாக வரும்காலத்தில் ஆன்லைன் தளத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. டி.வி.எஸ்-பிராண்டட் ரைடிங் கியரின் விலை பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
Gear | Price |
Riding jacket (red) | Rs 4,888 |
Riding jacket (green) | Rs 4,760 |
Riding pant (red) | Rs 4,208 |
Riding pant (green) | Rs 4,208 |
Rain jacket | Rs 1,359 |
Rain pant | Rs 1,104 |
Racing helmet | Rs 2,125 |