Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டிவிஎஸ் மோட்டார் வெளியிட்டுள்ள 2018 டிவிஎஸ் அப்பாச்சி 160 பைக் விலை உட்பட பல்வேறு அம்சங்கள் -முழுவிபரம்

by MR.Durai
14 March 2018, 10:23 pm
in Bike News
0
ShareTweetSend

இந்தியாவின் பிரசத்தி பெற்ற மோட்டார் சைக்கிள் நிறுவனமாக விளங்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின்,  மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்ட 2018 டிவிஎஸ் அப்பாச்சி 160 பைக் ரூ. 81,490 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

2018 டிவிஎஸ் அப்பாச்சி 160 பைக்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் முதன்முறையாக 2005 ஆம் ஆண்டு அப்பாச்சி பிராண்டு அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வரிசையில் அப்பாச்சி ஆர்டிஆர் 160, அதனை தொடர்ந்து அப்பாச்சி ஆர்டிஆர் 180, அப்பாச்சி RTR 200 4V ஆகிய மாடல்களை தொடர்ந்து முழுமையாக அலங்கரிக்கப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து விற்பனைக்கு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அப்பாச்சி 200 பைக்கின் தோற்ற அமைப்பின் உந்துதலை பின்னணியாக கொண்டு கூடுதலான தோற்ற மாற்றங்கள் மற்றும் நுட்பம் தொடர்பான மாற்றங்களை பெற்ற 2018 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் கார்புரேட்டர் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் ஆகியற்றுடன் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக்குகளை பெற்ற இரண்டு பிரிவுகளில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக் தோற்ற அமைப்பில் மூத்த மாடலாக விளங்கும் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கின் அடிப்படையில் புதுப்பிக்கப்பட்ட புதிய அடிச்சட்டத்தை பெற்று விளங்கும்யிந்த பைக்கில் முந்தைய பின்புற இரட்டை ஷாக் அப்சார்பர்களுக்கு மாற்றாக ஷோவா மோனோ-ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது.

இரட்டை குழல் கொண்ட சைலன்சரை பெற்று விளங்கும் இந்த மாடலில் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், ஹெட்லைட், டெயில் லைட், டர்ன் இன்டிகேட்டர் ஆகியவை அப்பாச்சி 200 பைக்கிலிருந்து பெற்றுள்ளது.  புதிய வடிவத்திலான அலாய் வீலை பெற்று விளங்கும் அப்பாச்சி 160 பைக்கில் ரேசிங் சிவப்பு, மெட்டாலிக் நீலம் மற்றும் நைட் கருப்பு ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்க தொடங்கியுள்ளது.

ஆயில் கூலிங் அம்சத்துடன் கூடிய அப்பாச்சி 160 பைக்கில் 159.7cc எஞ்சினுடன் 4 வால்வுகளுடன் கார்புரேட்டர் மாடல் அதிகபட்சமாக 16.5hp பவர் , 14.8 Nm டார் க் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது.

ஆயில் கூலிங் அம்சத்துடன் கூடிய அப்பாச்சி 160 பைக்கில் 159.7cc எஞ்சினுடன் 4 வால்வுகளுடன் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் மாடல் அதிகபட்சமாக 16.8hp பவர் , 14.8 Nm டார் க் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது.  இரு மாடல்களும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

800 மிமீ இருக்கை உயரம் பெற்ற அப்பாச்சி 160 பைக்கில் டிரம் பிரேக் மாடல் 145 கிலோ எடை, டிஸ்க் பிரேக் மாடல் 145 கிலோ எடையை பெற்று பெட்ரோல் டேங்க் கொள்ளவை 12 லிட்டர் பெற்று விளங்குகின்றது. ஒற்றை இருக்கை கொண்ட அப்பாச்சி 160 பைக் சந்தையில் உள்ள யமஹா FZ-S FI, ஹோண்டா ஹார்னெட் 160R, பஜாஜ் பல்சர் 160NS, மற்றும் பிரபலமான சுஸூகி ஜிக்ஸெர் ஆகியவற்றுடன் புதிதாக வெளியான ஹோண்டா எக்ஸ்-பிளேடு ஆகியவற்றுக்கு எதிராக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

2018 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விலை பட்டியல்

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V –  ரூ. 81,490 (carb front disk brake version)

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V  – ரூ. 84,490 (Carb double disc version)

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V  – ரூ. 89,990 ( EFi double disc version)

( எக்ஸ்-ஷோரூம் விலை )

 

Related Motor News

டிவிஎஸ் அப்பாச்சி RTX ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விற்பனைக்கு அறிமுகமானது

20 ஆண்டுகளை கொண்டாட சிறப்பு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

Tags: TVS ApacheTVS Motor
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

hero xpulse 210 dakar edition

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 டக்கார் எடிசன் விற்பனைக்கு எப்பொழுது.?

hero xtreme 125r dual channel abs

ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

இந்தியா வரவுள்ள நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் அறிமுகமானது

எலக்ட்ரிக் பிரிவில் டிவிஎஸ் e.FX.30, M1-S மற்றும் X அறிமுகம்

EICMA 2025ல் டிவிஎஸ் Tangent RR மற்றும் RTR ஹைப்பர்ஸ்டன்ட் கான்செப்ட் அறிமுகம்

தன்டர்போல்டு அட்வென்ச்சரை வெளியிட்ட பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ்

ஹிமாலயன் மானா பிளாக் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

குழந்தைகளுக்கான ஹீரோ விடா Dirt.e K3 ஆஃப்-ரோடு பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது

எதிர்காலத்திற்கான ஹீரோ விடா Novus சீரிஸ் கான்செப்ட் அறிமுகம்

125வது ஆண்டு கொண்டாட்ட ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 650 சிறப்பு எடிசன் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan