Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

புதிய நிறத்தில் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகம்

by automobiletamilan
June 26, 2019
in பைக் செய்திகள்

 

இந்தியாவின் முதல் கனெக்டேட் ஸ்கூட்டர் மாடலாக விளங்கும் டிவிஎஸ் என்டார்க் 125 மாடலில் புதிதாக மேட் சில்வர் நிறம் இணைக்கப்பட்டு கூடுதலாக ஸ்கூட்டர் ஆஃப் தி இயர் என்ற லோகோ மட்டும் பதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லை.

முன்பாக 6 நிறங்களில் கிடைத்து வந்த என்டார்க் 125 இனி ஏழு நிறங்களில் 5 மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட நிறங்கள் மற்றும் இரண்டு மெட்டாலிக் நிறத்தை பெற்றுள்ளது. அடுத்தப்படியாக இந்த மாடலில் விலை உயர்த்தப்படவில்லை.

டிவிஎஸ் என்டார்க் 125

இளைய தலைமுறையினர் பெரிதும் விரும்புகின்ற அம்சத்தை பெற்றுள்ள என்டார்க் 125 ஸ்கூட்டரில் புதிய CVTi-REVV 124.79 cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்டோர்க் 3 வால்வுகளை கொண்ட ஏர்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 9.3 bhp ஆற்றலை 7500 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம் சுழற்சியில் 10.5 Nm டார்க்கினை வழங்குகின்றது.

ஸ்மார்ட்போனை ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் வகையிலான ஆதரவினை கொண்டதாக வந்துள்ள என்டார்க் 125 மாடலில் டிவிஎஸ் SmartXonnect எனப்படும் நுட்பம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் ஆகும். இந்த டிஜிட்டல் கிளஸ்ட்டரிலிருந்து ப்ளூடூத் வாயிலாக மொபைல் போனை இணைக்கும் வசதி உட்பட, நேவிகேஷன் , அதிகபட்ச வேகம், லேப் டைமர், மொபைல் போன் பேட்டரி இருப்பு, இறுதியாக பார்க்கிங் செய்த இடம், சர்வீஸ் ரிமைன்டர், ட்ரிப்மீட்டர், இன்கம்மிங் அலர்ட், எஸ்எம்எஸ், மிஸ்டு கால் அலர்ட், எஞ்சின் வெப்பம், மொபைல் போன் நொட்வொர்க் சிக்னல், ஆட்டோ சிங்க் கடிகாரம், பிரத்தியேக ரைட் ஆப் போன்ற 55 அம்சங்களை கொண்டதாக கிடைக்க உள்ளது.

டிஸ்க் பிரேக் பெற்ற டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விலை ரூ.59,995 ஆகும்.

Tags: TVS Ntorq 125டிவிஎஸ் என்டார்க் 125
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version