இந்தியாவின் முன்னணி ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக டிவிஎஸ் மோட்டார் விளங்கி வருகின்ற நிலையில், சமீபத்தில் இளைய தலைமுறையினர் விரும்பும் வகையில் டிவிஎஸ் என்டார்க் 125 என்ற ஸ்கூட்டரை ரூ.63,750 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

டிவிஎஸ் என்டார்க் 125

மில்லியனல்ஸ் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகின்ற 2000 ஆம் ஆண்டில் பிறந்த இளைய தலைமுறையினரை ரசிக்கும் வகையிலான வடிவமைப்புடன் ஸ்மார்டான பல்வேறு அம்சங்கள என்டார்க் ஸ்கூட்டர் பெற்றதாக விளங்குகின்றது.

டிசைன்

ஏர்கிராஃப்ட் தோற்ற வடிவமைப்பினை உந்துதலை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள TVS Ntorq 125 ஸ்கூட்டர் ஸ்டைலிஷான முன்புறத்தில் பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குடன் ஹெட்லைட் கொண்டதாக உள்ள இந்த மாடலில் பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு பெற்றிருப்பதுடன் அகலமான 12 அங்குல டைமன்ட் கட் வீல் கொண்டதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

35 ஆண்டுகால டிவிஎஸ் ரேசிங் அனுபவத்தினை புகுத்தி மிக ஸ்டைலிஷாக ஏரோடைனமிக் தோற்ற அமைப்பிற்கு இணையான வடிவமைப்புடன், மேட் ஃபினிஷ் பெற்ற மஞ்சள், சிவப்பு, வெள்ளை, மற்றும் பச்சை ஆகிய 5 நிறங்களில் கிடைக்க உள்ளது.

எஞ்சின்

டிவிஎஸ் மோட்டாரின் என்டார்க் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள புத்தம் புதிய CVTi-REVV 124.79 cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்டோர்க் 3 வால்வுகளை கொண்ட ஏர்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 9.3 bhp ஆற்றலை 7500 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம் சுழற்சியில் 10.5 Nm டார்க்கினை வழங்குகின்றது.

0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் என்டார்க் 125 ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 95 கிமீ ஆகும்.

நுட்பவிபரம்

என் டார்க் ஸ்கூட்டர் 1865மிமீ நீளம், 710 மிமீ அகலம் மற்றும் 1160 மீமீ உயரத்தை பெற்றுள்ள என்டார்கில் 1285 மிமீ வீல்பேஸ் மற்றும் 185 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸை பெற்று 116.1 கிலோ எடை கொண்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனுடன் 100x80x12 ட்யூப்லெஸ் டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றிருப்பதுடன் பின்புறத்தில் கேஸ் நிரப்பட்ட ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பருடன் 110x80x12 ட்யூப்லெஸ் டயரில் 130மிமீ டிரம் பிரேக் இடம்பெற்றுள்ளது.

எஞ்சின் கில் ஸ்விட்ச், 22 லிட்டர் கொள்ளளவு கொண்ட இருக்கை அடியிலான ஸ்டோரேஜ் ஆகியற்றை பெற்றுள்ளது.

ஸ்மார்ட் கனெக்ட்டிவிட்டி

முதன்முறையாக ஸ்மார்ட்போனை ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் வகையிலான ஆதரவினை கொண்டதாக வந்துள்ள என்டார்க் 125 மாடலில் டிவிஎஸ் SmartXonnect எனப்படும் நுட்பம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் ஆகும். இந்த டிஜிட்டல் கிளஸ்ட்டரிலிருந்து ப்ளூடூத் வாயிலாக மொபைல் போனை இணைக்கும் வசதி உட்பட, நேவிகேஷன் , அதிகபட்ச வேகம், லேப் டைமர், மொபைல் போன் பேட்டரி இருப்பு, இறுதியாக பார்க்கிங் செய்த இடம், சர்வீஸ் ரிமைன்டர், ட்ரிப்மீட்டர், இன்கம்மிங் அலர்ட், எஸ்எம்எஸ், மிஸ்டு கால் அலர்ட், எஞ்சின் வெப்பம், மொபைல் போன் நொட்வொர்க் சிக்னல், ஆட்டோ சிங்க் கடிகாரம், பிரத்தியேக ரைட் ஆப் போன்ற 55 அம்சங்களை கொண்டதாக கிடைக்க உள்ளது.

 

போட்டியாளர்கள்

சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் 125சிசி ஸ்கூட்டர்களில் மிக நேர்த்தியான வடிவமைப்புடன் ஸ்மார்டான ஆதரவுகளை பெற்று விளங்குகின்ற நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும், அப்ரிலியா எஸ்ஆர்125, ஹோண்டா கிரேஸியா 110 ஆகிய மாடல்களுக்கு கடுமையான சவாலினை விடுக்கும் வகையில் என்டார்க் 125 ஸ்கூட்டர் விளங்குகின்றது.

விலை விபரம்

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்கூட்டர் சந்தையில் மிக ஸ்டைலிஷான மாடலாக விளங்கின்ற டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் விலை ரூ.63,750 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)