இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள சரிவினை தொடர்ந்து வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு பதிப்பாக டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கில் கூடுதலாக வெள்ளை மற்றும் கருப்பு நிற கலவை பெற்ற டூயல் டோன் மாடலை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
நிறத்தை தவிர மற்றபடி எந்த மாற்ற்களும் மேற்கொள்ளவில்லை. முன்பாக டூயல் டோன் பெற்ற எடிஷன் மற்றும் கார்கில் எடிசன் போன்ற மாடல்கள் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கில் இடம்பெற்றுள்ளது.
விற்பனையில் உள்ள மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லாமல், 8.30 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 109.7 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 8.70 Nm ஆகும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஸ்டார்ட் சிட்டி + பைக் மைலேஜ் லிட்டருக்கு 86 கிமீ என ஆராய் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் முன்புற சக்கரங்களுக்கு 130மிமீ டிரம் பிரேக் மற்றும் பின்புற சக்கரங்களில் 110மிமீ டிரம் பிரேக் பெற்றிருக்கின்றது.
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் எடிசன் விலை ரூபாய் 54,579 மட்டும் ஆகும்.