வரும் நவம்பர் 13 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள அல்ட்ராவைலெட் எஃப்-77 இந்தியாவின் முதல் பெர்ஃபாமென்ஸ் எலெக்ட்ரிக் பைக் மாடலாக விற்பனைக்கு வரவுள்ளது. 200சிசி முதல் 250சிசி க்கு இணையான பைக்குகளுக்கு போட்டியாக அல்ட்ராவைலெட்டி விளங்க உள்ளது.
பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான அல்ட்ராவைலெட் ஆட்டோமோட்டிவ் நிறுவனம், கடந்த 2016 ஆம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி 25.78 % முதலீட்டை மேற்கொண்டுள்ளது. இரு நபர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்பொழுது 50 க்கு மேற்பட்ட அனுபவமிக்க ஆட்டோ,டெக், ஏரோஸ்பேஸ் துறை வல்லுநர்களை கொண்டு இயங்குகின்றது.
மிக சிறப்பான ஏரோடைனமிக் டிசைனை பெற்று வரவுள்ள இந்த மாடலுக்கு ஏவிடேஷன் துறையில் பயன்படுத்துகின்ற பெயருக்கு இணையாக எஃப்-77 என பெயரிடப்பட்டுளது. இந்த பைக்கில் அதிகபட்சமாக 25 கிலோ வாட் வழங்குகின்ற மோட்டார் தொடக்கநிலையில் 450 நியூட்டன் மீட்டர் டார்க்கை வழங்கும். அதேவேளை, 0-60 கிமீ வேகத்தை வெறும் 3.0 விநாடிகளில் எட்டிவிடும் திறனை கொண்டிருக்கின்றது.
மற்றபடி பேட்டரி ரேஞ்சு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அதிகபட்சமாக F77 மாடல் 150 கிமீ ரேஞ்சு வெளிப்படுத்தலாம். அதிகபட்ச வேகம் மணிக்கு 120 கிமீ எட்டலாம். பல்வேறு கனெகட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன் முன்பக்கம் யூஎஸ்டி ஃபோர்க், பின்புற மோனோஷாக் சஸ்பென்ஷன் பெற்றிருப்பதுடன், இருபக்க டயரில் டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றிருக்கும்.
அல்ட்ராவைலெட் F77 எலெக்ட்ரிக் பைக் விலை ரூ.2 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை விற்பனை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.