ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 500சிசி-க்கு குறைவான திறன் பெற்ற 338ஆர் பைக்கின் ஸ்பை படம் முதன்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது. பெனெல்லி நிறுவனத்தின் தலைமையகமான சீனாவின் கியான்ஜியாங் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பெனெல்லி 302எஸ் அடிப்படையில் இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் முதன்முறையாக ஹார்லி டேவிட்சன் வெளியிட்ட HD338R கான்செப்ட்டின் டீசர் அடிப்படையில் நேரடியாக உற்பத்தி நிலை மாடலை வடிவமைத்துள்ளது.மிகவும் ஸ்டைலிஷான வட்ட வடிவ எல்இடி விளக்குகள், என்ஜின் தொடர்பில் ஒரு சிலிண்டர் கொண்டதாகவும், இரண்டு புகைப்போக்கி மற்றும் குறைவான பாடி வெர்க் கொண்டதாக விளங்குகின்றது.
338cc அல்லது 353cc என்ஜினாக இருக்கலாம், பெரும்பாலும் இந்த மாடல் ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக சீனாவில் வெளியிடப்பட உள்ள இந்த பைக் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வர முன்பாக ஹார்லி டேவிட்சன் திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் இயங்குகின்ற ஹார்லியின் விற்பனை மிகவும் மோசமடைந்துள்ளதால் இந்தியாவை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வருகின்றது.
இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா.? அல்லது ஹார்லி இந்தியாவை விட்டு வெளியேறுமா ? என்பது அடுத்த சில மாதங்களுக்குள் தெரிய வரும்.