பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மோட்டார்சைக்கிள் மாடலின் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட புதிய கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500 பைக்குகள் அடுத்த சில மாதங்களுக்குள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.
சர்வதேச அளவில் நடுத்தர ரக 250சிசி முதல் 750 சிசி வரையிலான மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னனி வகிக்கும் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் வரிசையின் புதிய மாடல் சோதனை செய்யப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500 பைக்குகள்
பவர்டிரிஃப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள படங்களின் மூலம் கிளாசிக்கின் புதிய மாடல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோதனை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
சமீபத்தில் கிளாசிக் பைக்குகள் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் போன்றவை பெற்ற நிலையில், அடுத்த தலைமுறை கிளாசிக் பல்வேறு மெக்கானிக்கல் மாற்றங்களை பெற்றதாக வரவுள்ளது.
குறிப்பாக தற்போது கிடைத்துள்ள, படங்களின் மூலம் தெளிவான தனது பாரம்பரிய தோற்றத்தை தக்கவைத்துக் கொண்டு , கூடுதல் சொகுசு தன்மையை வழங்கும் இருக்கை, தற்போது சோதனை படங்களில் முன் மற்றும் பின்புற டிஸ்க்குகள் வலதுபுறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. விற்பனையில் உள்ள மாடலில் இடதுபுறமாக உள்ளது. மேலும் செயின் இடதுபுறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுதவிர குறிப்பிடதக்க மாற்றமாக புகைப்போக்கி புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இது பிஎஸ் 6 என்ஜின் கொண்ட மாடலாகவும், என்ஜின் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு பவர் மற்றும் டார்கில் மாற்றங்கள் இருக்கும் என கருதப்படுகின்றது. புதிய அமைப்பினை கொண்ட ஷாக் அப்சார்பர், இருக்கை கிராப் ரெயில் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வசதிகளை கொண்டதாக இந்த புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல் விளங்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
image source – Instagram powerdrift