Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2024ல் வரவிருக்கும் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்

by MR.Durai
25 December 2023, 11:27 am
in Bike News
0
ShareTweetSend

upcoming Royal Enfield launches 2024

நடுத்தர மோட்டார் சைக்கிள் சந்தையின் முதன்மையான ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2024 ஆம் ஆண்டு பல்வேறு புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. கூடுதலாக உற்பத்தி நிலை எலக்டரிக் பைக் பற்றி முக்கிய தகவல் வெளியாகலாம்.

350சிசி வரிசையில் பாபர் ஸ்டைல் பெற்ற கோன் கிளாசிக் 350, 450சிசி வரிசையில் ஸ்க்ராம் 450, கொரில்லா 450 (not Road Legel), ஃபேரிங் ஸ்டைல் கான்டினென்டினல் GT-R 450, அடுத்து, 650சிசி வரிசையில் ஷாட்கன் 650, புல்லட் 650, ஸ்கிராம் 650, ஹிமாலயன் 650, மற்றும் ஃபேரிங் கான்டினென்டினல் GT-R 650 ஆகியவற்றுடன் முதல் எலக்ட்ரிக் பைக் 2025 துவக்க மாதங்களில் வெளியாகலாம்.

கூடுதலாக 440சிசி ஏர் கூல்டு என்ஜின் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அந்த வரிசையில் ஸ்கிராம் 440 வெளியாகலாம்.

Royal Enfield Shotgun 650

வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள பாபர் ஸ்டைல் பெற்ற ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக்கில் 648cc பேரல் ட்வின் என்ஜின் அதிகபட்சமாக 47 Hp பவரை 7100 RPM-ல் வழங்குவதுடன்,  4000 RPMல் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

சூப்பர் மீட்டியோர் 650 மாடலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ஷாட்கன் 650 மோட்டோவெர்ஸ் எடிசன் 25 எண்ணிக்கையில் ரூ.4.25 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டது. எனவே, புதிய ஷாட்கன் 650 பைக்கின் விலை ரூ.3.70 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

RE shotgun 650

Royal Enfield Goan Classic 350

ஷாட்கன் போலவே பாபர் ஸ்டைலை பெற உள்ள ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 பைக் விற்பனையில் உள்ள கிளாசிக் 350 என்ஜின் உட்பட பல்வேறு அம்சங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.

349cc, ஒற்றை சிலிண்டர், ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6,100rpm-ல் 20.2 Bhp பவரையும் , 4000rpm-ல் 27 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜினில் 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு மாரச் மாதம் விற்பனைக்கு வெளியாக உள்ள பாபர் ஸ்டைல் கோன் கிளாசிக் 350 விலை ரூ. 2.30 லட்சத்தில் வெளியாகலாம்.

re-classic-350-bike

Royal Enfield Classic 650

பிரபலமான கிளாசிக் வரிசை பைக்கின் அடிப்படையில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 பைக் மாடல் பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். 648cc பேரல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 Hp பவரை 7100 RPM-ல் வழங்குவதுடன்,  4000 RPMல் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

2024 பண்டிகை காலத்துக்கு முன்னிட்டு ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 விலை ரூ.3.50 லட்சத்தில் வெளிவரலாம்.

royal enfield logo

Royal Enfield Guerilla 450

ஹிமாலயன் 450 பைக்கின் அடிப்படையில் வரவுள்ள ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 அட்வென்ச்சர் ரக மாடல் பொது சாலைகளுக்கு ஏற்றதாக அல்லாமல் மூடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

செர்பா 452cc என்ஜின் ரேலிக்கு ஏற்ற வகையில் சில மாறுதல்கள் பெற்று ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது அதிகபட்சமாக 8,000rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெறலாம்.

2024 ஆம் ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 விலை ரூ. 3 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

royal-enfield-himalayan-450

Royal Enfield Electric Bike

EICMA 2024 அரங்கில் எதிர்பார்க்கப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு முதல் எலக்ட்ரிக் பைக் மாடல் ஆனது சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சோதனை ஓட்டத்திற்கான டெஸ்ட் பெட் HIM-E அடிப்படையில் புதிய எலக்ட்ரிக் பைக் அனேகமான அட்வென்ச்சர் பிரிவில் வெளியாக வாய்ப்புள்ளது. 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியாகலாம்.

re himalayan e-bike

Related Motor News

125வது ஆண்டு கொண்டாட்ட ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 650 சிறப்பு எடிசன் அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 750 விற்பனைக்கு எப்பொழுது.!

ரூ.3.37 லட்சம் விலையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 விற்பனைக்கு வெளியானது

ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 650 பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

புதிய கிளாசிக் 650 பைக்கினை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

Royal Enfield Scram 440

சமீபத்தில் வெளியான டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400 X பைக்கிற்கு சவால் விடுக்கும் வகையில் ஸ்கிராம் 440 என குறைந்த விலை கொண்டதாக விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற மாடல் விலை ரூ.2.50 லட்சத்துக்குள் எதிர்பார்க்கலாம்.

scram 411

Royal Enfield Hunter 450

450cc என்ஜினை பெற உள்ள இரண்டாவது மாடலாக ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 450 ஆனது ஏற்கனவே சந்தையில் உள்ள ஹண்டர் 350 அடிப்படையில் தயாரிக்கப்படலாம். 452சிசி என்ஜின் 8,000rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற உள்ளது.

2024 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஹண்டர் 450 மாடல் விலை ரூ.2.40 லட்சத்துக்குள் எதிர்பார்க்கலாம்.

royal enfield hunter 350 x

மற்ற மாடல்களான புல்லட் 650, ஸ்கிராம் 650, ஹிமாலயன் 650, மற்றும் ஃபேரிங் கான்டினென்டினல் GT-R 650 உட்பட கான்டினென்டினல் GT-R 450 ஆகியவை 2025 ஆம் ஆண்டுக்குள் எதிர்பார்க்கலாம்.

Tags: Royal Enfield Classic 650Royal Enfield Himalayan ElectricRoyal Enfield Hunter 450
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

hero xpulse 210 dakar edition

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 டக்கார் எடிசன் விற்பனைக்கு எப்பொழுது.?

hero xtreme 125r dual channel abs

ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

இந்தியா வரவுள்ள நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் அறிமுகமானது

எலக்ட்ரிக் பிரிவில் டிவிஎஸ் e.FX.30, M1-S மற்றும் X அறிமுகம்

EICMA 2025ல் டிவிஎஸ் Tangent RR மற்றும் RTR ஹைப்பர்ஸ்டன்ட் கான்செப்ட் அறிமுகம்

தன்டர்போல்டு அட்வென்ச்சரை வெளியிட்ட பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ்

ஹிமாலயன் மானா பிளாக் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

குழந்தைகளுக்கான ஹீரோ விடா Dirt.e K3 ஆஃப்-ரோடு பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது

எதிர்காலத்திற்கான ஹீரோ விடா Novus சீரிஸ் கான்செப்ட் அறிமுகம்

EICMA 2025ல் ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 பைக் அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan