2021-ல் ராயல் என்ஃபீல்டு வெளியிட உள்ள மோட்டார் சைக்கிள்கள்

56591 2020 royal enfield classic 350 rear

இந்தியாவின் முதன்மையான நடுத்தர மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவனம், வரும் 2021 ஆம் ஆண்டில் புதிய கிளாசிக் உட்பட 2021 ஹிமாலயன், ஹண்டர், குறைந்த விலை இண்டர்செப்டார் பைக்குகளை வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு வெளியிட்ட மீட்டியோர் 350 க்ரூஸர் ரக ஸ்டைல் மாடல் மிக சிறப்பான வகையில் உருவாக்கப்பட்டு, வைப்ரேஷன் பெருமளவு குறைக்கப்பட்டு ஸ்டைலிஷாக ரூ.1.76 லட்சம் முதல் துவங்கி ரூ.1.99 லட்சம் வரையிலான விலை வெளியிடப்பட்டது.

புதிய கிளாசிக் 350

தற்போது வடிவமைக்கப்பட்டு வரும் J-பிளாட்ஃபாரத்தில் இடம்பெற உள்ள கிளாசிக் பைக் மிகவும் மேம்பட்ட வசதிகளுடன், விற்பனையில் உள்ள மாடலை விட சிறப்பான க்ரூஸிங் அனுபவத்தை வழங்கவும், அதிர்வுகள் இல்லாத பைக் மாடலாக விளங்கும். விற்பனையில் உள்ள மீட்டியோர் 350 பைக்கின் இன்ஜினை பகிர்ந்து கொள்ள உள்ளது.

மேலும் மீட்டியோர் மாடலில் இடம்பெற்றுள்ளதை போன்ற ரெட்ரோ சுவிட்ச் கியர்ஸ் மற்றும் டிரிப்பர் நேவிகேஷன் ஆகியவற்றை பெற்றிருக்கும். இந்த பைக்கின் விலை ரூ. 1.70 லட்சத்தில் துவங்க வாய்ப்புகள் உள்ளது. 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சந்தைக்கு வரக்கூடும்.

650சிசி ரோட்ஸ்டெர்

ஆர்இ நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற 650 ட்வின்ஸ் பைக்குகளில் பயன்படுத்தப்பட்டுள்ள க்ரூஸர் ஸ்டைல் பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் முன்பாக வெளியான நிலையில், இந்த மாடல் அனேகமாக  2021 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் எதிர்பார்க்கலாம்.

ஹண்டர் அல்லது செர்பா

மற்றொரு நவீனத்துவமான ரோட்ஸ்டெர் மாடல் ஒன்று சோதனை செய்யப்படுகின்ற படங்கள் முன்பாக இணையத்தில் வெளியாகிருந்தது. இந்த ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350சிசி இன்ஜினை பெற்று பல்வேறு நவீன வசதிகளை கொண்டதாகவும், மிகவும் சவாலான விலையிலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

image source -rushlane

புதிய 650 ட்வீன்ஸ்

தற்போது மீட்டியோரில் இடம்பெற்றிருக்கின்ற டிரிப்பர் நேவிகேஷன் வசதியை பெற்றதாக 650சிசி ட்வின்ஸ் என அறியப்படுகின்ற இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 பைக்கில் இடம்பெற உள்ளது.

புதிய ஹிமாலயன் மற்றும் 650சிசி

தற்போது விற்பனையில் உள்ள ஹிமாலயன் பைக்கில் கூடுதலாக ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி சார்ந்த டிரிப்பர் நேவிகேஷன் பெற்று கூடுதலாக சில ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற அம்சங்கள் இணைந்திருக்கும்.

இதுதவிர, 650சிசி இன்ஜின் பெற்ற என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு மிக நீண்ட காலமாக உள்ளது.

புதிய இன்டர்செப்டார் 350 அல்லது 500

சமீபத்தில் ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டார் பைக்கின் அடிப்படையில் பாகங்களை கொண்டு சோதனை செய்யப்படுகின்ற பைக்கின் படங்கள் வெளியானதை தொடர்ந்து, குறைந்த சிசி பெற்ற இன்டர்செப்டார் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. ஆனால், இந்த மாடல் வருகை குறித்தான எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை.

Exit mobile version