இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற பிரபலமான ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 110 ஸ்கூட்டரில் புதிதாக கனெக்டிவிட்டி சார்ந்த டிஜிட்டல் கஸ்ட்டருடன் 2025 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு ரூபாய் 85,222 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து STD, DLX, H-Smart என மூன்று விதமாக விற்பனை செய்யப்பட உள்ளது.
குறிப்பாக முந்தைய மாடலின் அடிப்படையான டிசைனில் எந்த மாற்றங்களும் இல்லை என்றாலும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள ப்ளூடூத் ஆதரவுடன் கூடிய 4.2 டிஎஃப்டி கிளஸ்ட்டர் ஆனது முக்கிய மாற்றமாக கருதப்படுகின்றது இந்த மாற்றமானது ஏற்கனவே எஸ்பி 125 உட்பட பல்வேறு பைக்குகளில் மற்றும் 125சிசி ஆக்டிவா மற்றும் டியோ 110 போன்ற மாடல்களில் இந்நிறுவனம் அறிமுகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆக்டிவா 110 ஸ்கூட்டரில் OBD2B மற்றும் E20 ஏர்-கூல்டு, 109cc, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 7.8hp மற்றும் 5,250rpm-ல் 9 Nm டார்க் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
- 2025 ACTIVA STD-OBD2B Rs.85,222
- 2025 ACTIVA DLX-OBD2B Rs.94,741
- 2025 ACTIVA SMART-OBD2B Rs.97,742