வெஸ்பா அர்பன் கிளப்

வெஸ்பாவின் குறைந்த விலை ஸ்கூட்டர் மாடலாக அர்பன் கிளப் ஸ்கூட்டரினை ரூபாய் 72,190 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக ஏப்ரிலியா ஸ்கூட்டரின் குறைந்த விலை ஏப்ரிலியா ஸ்ட்ரோம் 125 விற்பனைக்கு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வெஸ்பாவின் குறைந்த விலை மாடலும் பியாஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வெஸ்பா அர்பன் கிளப் ஸ்கூட்டர்

பியாஜியோவின் மொபைல் கனெக்ட்டிவிட்டி ஆதரவை பெற்ற இந்த ஸ்கூட்டரில் 125சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று வால்வுகளை கொண்ட ஏர்கூல்டு என்ஜின் பெற்ற 9.5 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 9.8 என்எம் முறுக்கு விசை வெளிப்படுத்தும் 124.49 சிசி என்ஜின் பெற்றிருக்கின்றது.

அர்பன் கிளப் மாடலில் இரு புற டயர்களிலும் 10 அங்குல வீல் பெற்று டிரம் பிரேக் கொண்டதாக வந்துள்ளது. கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்றதாக வந்துள்ளது. கிரே, மஞ்சள், சிவப்பு மற்றும் ப்ரோவெஸா போன்ற நான்கு நிறங்களை கொண்டுள்ளது.

அர்பன் கிளப் ஸ்கூட்டர் மாடல் பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா மற்றும் அப்ரிலியா மாடல்களுடன் மிகவும் ஸ்டைலிஷான ரெட்ரோ தோற்றத்தை பெற்றதாக விற்பனை செய்யப்பட உள்ளது.