இந்திய சந்தையில் யமஹா மோட்டார் நிறுவனம் அடுத்ததாக அட்வென்ச்சர் ஸ்டைல் மாடலாக FZ-X விற்பனைக்கு கொண்டு வரும் நோக்கத்தில் பெயருக்கு காப்புரிமை கோரியுள்ளது. தற்போது FZ வரிசையில் விற்பனைக்கு கிடைக்கின்ற 150சிசி முதல் 250 சிசி வரையிலான மாடல்களில் ஏதேனும் ஒரு இன்ஜின் பெற்றதாக இருக்கலாம்.
FZ-S மற்றும் FZS 25 மாடலை போலவே, சில குறிப்பிடதக்க வகையிலான மாற்றங்களை பெற்ற அட்வென்ச்சர் பைக்குகளுக்கு இணையான அம்சங்களை பெற்ற FZ-X ஒரு மாறுபாடாக இருக்கும்.
FZS 25 , FZ25 என இரு பைக்கிலும் புளூ கோர் என்ஜின் நுட்பத்துடன் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20.1 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
புதிய யமஹா FZ-X பைக்கின் அறிமுகம் அனேகமாக 2021 ஆம் ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கலாம்.