இந்தியாவில் விற்பனையில் கிடைக்கின்ற எம்டி-15 பைக்கில் கூடுதலாக மான்ஸ்டெர் மோட்டோ ஜிபி எடிசன் மாடலை ரூ.1,47,900 விலையில் யமஹா மோட்டார் வெளியிட்டுள்ளது. விற்பனையில் உள்ள மற்ற மாடலை விட ரூ.3000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.
மெக்கானிக்கல் சார்ந்த மாற்றங்கள் இல்லாமல் புதிய நிறம் மற்றும் பாடிகிராபிக்ஸ் மட்டும் பெற்றுள்ளது. எம்டி-15 பைக்கில் 19.1 ஹெச்பி பவர், மற்றும் 14.7 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் புதிய 155சிசி இன்ஜின் திரவ-குளிரூட்டப்பட்ட, 4 ஸ்ட்ரோக், SOHC, 4 வால்வு பெற்று 6 வேக கியர்பாக்சுடன் சிலிப்பர் கிளட்ச் வசதியை பெற்றிருக்கின்றது.
MT-15 பைக்கின் நீளம் 2,020மிமீ , 800மிமீ அகலம் மற்றும் 1,070மிமீ உயரம் கொண்டுள்ளது. இந்த பைக்கின் வீல்பேஸ் 1,335 மிமீ ஆகும். பைக்கின் மொத்த வாகனத்தின் எடை 238 கிலோ ஆகும். கெர்ப எடை 138 கிலோ கிராம் ஆகும்.
Colour | Price |
---|---|
Dark Matt Blue | Rs. 1,44,900/- |
Metallic Black | Rs. 1,44,900/- |
Ice Fluo-Vermillion | Rs. 1,45,900/- |
MotoGP Edition | Rs. 1,47,900/- |
( ex-showroom, Delhi)