இந்தியா யமஹா மோட்டார் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஸ்போர்ட்டிவ் ஃபேரிங் ஸ்டைல் மாடலாக விளங்குகின்ற ஆர்15 பைக்கின் வெர்ஷன் 4.0 சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படம் முதன்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

தற்போது விற்பனையில் கிடைத்து வருகின்ற ஆர்15 வெர்ஷன் 3.0 மாடலை விட பல்வேறு வகையில் ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றிருப்பதுடன், புதிய நிறங்கள், நவீன வசதிகள் என பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கும்.

யமஹா YZF-R15 v4 எதிர்பார்ப்புகள்

சர்வதேச அளவில் விற்பனையில் கிடைத்து வருகின்ற யமஹா R7 பைக்கின் முகப்பு தோற்ற உந்துதலை பெற்றதாக எதிர்பார்க்கப்படுகின்ற 2022 ஆர்15 பைக்கில் மிக ஸ்டைலிஷனான அபைப்புடன் கூடிய விண்ட்ஷீல்டூ, எல்இடி புராஜெக்டர் விளக்கை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பக்கவாட்டு தோற்ற அபைப்பில் சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்களை மட்டும் பெற்று வழக்கமான பேனல்களை கொண்டு புதிய நிறத்துடன், நவீனத்துவமான ஸ்டிக்கரிங் அம்சங்கள் சேர்க்கப்படலாம். அடுத்தப்படியாக, சஸ்பென்ஷன், பிரேக்கிங் செட்டப் உட்பட பல்வேறு மெக்கானிக்கல் அம்சங்களில் பெரிதாக மாற்றங்கள் இல்லாமல் மேம்பாடுகளை மட்டும் பெற்றிருக்கலாம்.

R15 V3.0 பைக்கில் 19.1 ஹெச்பி பவர், மற்றும் 14.7 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் புதிய 155சிசி இன்ஜின் திரவ-குளிரூட்டப்பட்ட, 4 ஸ்ட்ரோக், SOHC, 4 வால்வு பெற்று 6 வேக கியர்பாக்சுடன் சிலிப்பர் கிளட்ச் வசதியை பெற்றிருக்கின்றது. இதே என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஆர்15 வி 4.0 பெறலாம்.

புதிய யமஹா R15 V4.0 பைக் 2022 ஆம் ஆண்டின் துவக்கம் அல்லது மத்தியில் விற்பனைக்கு ரூ.1.65 லட்சத்திற்குள் எதிர்பார்க்கலாம்.