ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் ஷைன் 125 பைக்கின் OBD-2B இணக்கமான 2025 ஆம் ஆண்டிற்கான மாடல் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
2025 Honda Shine 125
முன்பாக விற்பனையில் உள்ள ஷைன் 125 பைக்கில் தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்கலும் இல்லாமல், புதிய பாடி கிராபிக்ஸ் டிசைன் கொண்டதாக மட்டும் வந்துள்ளது. புதிய BS6 இரண்டாம் கட்ட மாசு உமிழ்வுக்கு இணையான OBD-2B மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக தயாரிக்கப்பட்டுள்ள ஷைன் 125cc மாடலில் 123.94cc என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7500rpm-ல் 10.59 hp குதிரைத்திறன் மற்றும் 6000rpm-ல் 11 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
ஷைன் 125 பைக்கில் டைமண்ட் ஃபிரேம் சேஸ் கொடுக்கப்பட்டு 18 இன்ச் வீல் கொடுக்கப்பட்டுள்ள முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா ஷைன் 125 பைக் மாடலின் பரிமாணங்கள் 2036 மிமீ நீளம், 737 மிமீ அகலம் மற்றும் 1116 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 1,285 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 791 மிமீ மற்றும் 162 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.
114 கிலோ கெர்ப் எடை கொண்டுள்ள சைன் 125 பைக்கில் முன்புறத்தில் 80/100-18 M/C 47P மற்றும் பின்புறத்தில் 90/100-18 M/C 54P ட்யூப்லெஸ் டயர் கொடுக்கப்பட்டு, முன்பக்கத்தில் 240 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் பிரேக் பெற்று, பின்பக்க டயரில் 130மிமீ டிரம் பிரேக் உடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் ஆனது இடம்பெற்றுள்ளது.
எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று 2025 மாடலில் நிகழ்நேரத்தில் மைலேஜ், ஈக்கோ இன்டிகேட்டர், சர்வீஸ் நினைவூட்டல் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கும். மற்ற வசதிகளில், யூஎஸ்பி-சி டைப் சார்ஜிங் போர்ட் உள்ளது.
ஹோண்டா ஷைன் 125 பைக் தமிழ்நாட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை
SHINE 125 DRUM OBD2B – Rs.81,042
SHINE 125 DISC OBD2B – Rs.85,401
(All Prices Ex-Showroom Tamil Nadu)
2025 Honda Shine 125 on-Road Price Tamil Nadu
2025 ஹோண்டா ஷைன் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களிடம் சேர்க்கப்படும் ஆக்செரிஸ் பொறுத்து மாறுபடும்.
- SHINE 125 DRUM-OBD2b – Rs.96,796
- SHINE 125 DISC OBD2b – Rs.1,00,187
(All Prices on-road Tamil Nadu)
- SHINE 125 DRUM-OBD2 – Rs.88,964
- SHINE 125 DISC OBD2 – Rs.92,898
(All Prices on-road Pondicherry)
ஹோண்டா ஷைன் 125 நுட்பவிரங்கள்
என்ஜின் | |
வகை | ஏர் கூல்டு, 4 stroke |
Bore & Stroke | 50.0 X 63.121 mm |
Displacement (cc) | 123.94 cc |
Compression ratio | 10.0:1 |
அதிகபட்ச பவர் | 10.9 hp (7.9 kW) at 7500 rpm |
அதிகபட்ச டார்க் | 11 Nm at 6000 rpm |
எரிபொருள் அமைப்பு | Fuel injection (PGM-FI) |
டிரான்ஸ்மிஷன் & சேஸ் | |
ஃபிரேம் | டைமன்ட் டைப் |
டிரான்ஸ்மிஷன் | 5 ஸ்பீடு |
கிளட்ச் | வெட் மல்டி பிளேட் |
சஸ்பென்ஷன் | |
முன்பக்கம் | டெலிஸ்கோபிக் |
பின்பக்கம் | இரட்டை ஷாக் அப்சார்பர் |
பிரேக் | |
முன்புறம் | டிஸ்க் 240 mm/டிரம் 130 mm |
பின்புறம் | டிரம் 130 mm (with IBS) |
வீல் & டயர் | |
சக்கர வகை | அலாய் |
முன்புற டயர் | 80/100-18 ட்யூப்லெஸ் |
பின்புற டயர் | 90/100-18 ட்யூப்லெஸ் |
எலக்ட்ரிக்கல் | |
பேட்டரி | 12V,4.0Ah MF பேட்டரி |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப் & கிக் |
பரிமாணங்கள் | |
நீளம் | 2046 mm |
அகலம் | 737 mm |
உயரம் | 1116 mm |
வீல்பேஸ் | 1285 mm |
இருக்கை உயரம் | 791 mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 162 mm |
எரிபொருள் கொள்ளளவு | 10.5 litres |
எடை (Kerb) | 113 kg (Drum) |
ஹோண்டா ஷைன் 125 நிறங்கள்
ஹோண்டா ஷைன் பைக்கில் ரீபெள் ரெட் மெட்டாலிக், கருப்பு, கிரே மெட்டாலிக், டிசென்ட் ப்ளூ மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே என மொத்தமாக 5 நிறங்களில் கிடைக்கின்றது.
Honda Shine 125 Rivals
2025 ஆம் ஆண்டிற்கான ஷைன் 125 பைக்கிற்கு போட்டியாக ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர், பல்சர் 125, கிளாமர் 125 பைக்குகளுடன் பல்சர் என்எஸ் 125, டிவிஎஸ் ரைடர், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் மற்றும் ஹோண்டா SP 125 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
Faq Honda Shine 125
ஹோண்டா ஷைன் 125 என்ஜின் விபரம் ?
ஷைன் 125cc மாடலில் 123.94cc என்ஜின் 7500rpm-ல் 10.59 hp குதிரைத்திறன் மற்றும் 6000rpm-ல் 11 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
2025 ஹோண்டா ஷைன் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை ?
2025 ஹோண்டா ஷைன் ஆன்-ரோடு விலை ₹ 96,796 முதல் ₹ 1.01 லட்சம் ஆகும்.
ஹோண்டா ஷைன் 125 பைக்கின் மைலேஜ் விபரம் ?
2025 ஹோண்டா ஷைன் 125 மைலேஜ் 60-62 Kmpl வரை கிடைக்கும்.
2025 ஷைன் 125 பைக் போட்டியாளர் ?
2025 ஷைன் 125 பைக்கிற்கு போட்டியாக ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர், பல்சர் 125, கிளாமர் 125 பைக்குகளுடன் பல்சர் என்எஸ் 125, டிவிஎஸ் ரைடர், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் மற்றும் ஹோண்டா SP 125 உள்ளது.
2025 Honda Shine 125 Bike Image Gallery
Last Updated -Price GST 2.0 tax structure 22/09/2025