ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி அறிமுகம்

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி என்ற பெயரில் அதிக சக்தி வெளிப்படுத்தக்கூடிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் விற்பனைக்கு வந்துள்ளது.

போலோ ஜிடி டிஎஸ்ஐ காரில் 1.2 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்ஷனுடன் டர்போசார்ஜ்டு பயன்படுத்தப்பட்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 105பிஎஸ் மற்றும் டார்க் 175என்எம் ஆகும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Volkswagen Polo GT TSI

டைரக்ட் இன்ஜெக்ஷனுடன் டர்போசார்ஜ்டு பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் நவீன நுட்பம் ஆகும்.

இதன் மைலேஜ் லிட்டருக்கு 17.2 கிமீ ஆகும் (ARAI). 0-100 கிமீ வேகத்தினை 9.7 விநாடியில் தொட்டுவிடும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 190கிமீ ஆகும்.

கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, 15 இஞ்ச் அலாய் வீல்கள், 2 டின் மியூசிக் சிஸ்டம் ஸ்டீயரிங் வீலில் போன்ற வசதிகள் உள்ளன.

போலோ ஜிடி காரில் பல்வேறு விதமான பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது. அவை இஎஸ்பி, ஏபிஎஸ், காற்றுபைகள் மற்றும் ஹில் ஹோல்டு போன்ற வசதிகள் உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி விலை ரூ.7.99 லட்சம் ( தில்லி எக்ஸ்ஷோரூம்)

Exit mobile version