Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

புதிய வோக்ஸ்வேகன் லோகோ, வோக்ஸ்வேகன் ID.3 எலக்ட்ரிக் கார் அறிமுகமானது

by automobiletamilan
September 12, 2019
in Auto Show

Volkswagen ID.3

2019 பிராங்பர்ட் மோட்டார் ஷோவில் வோக்ஸ்வேகன் குழுமத்தின் புதிய லோகோ மற்றும் 550 கிமீ ரேஞ்ச் வழங்கவல்ல வோக்ஸ்வேகன் ID.3 எலக்ட்ரிக் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் பாரிஸ் மோட்டார் ஷோவில் ID முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த சில மாதங்களில் உற்பத்திக்குச் செல்ல உள்ள ID.3 காரை காட்சிப்படுத்தியுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள முப்பரிமான ப்ளூ – சில்வர நிற லோகோ 2000 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. புதிதாக ஃபிராங்ஃபேர்டில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இலச்சினை 2டி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டீசல்கேட் மாசு உமிழ்வுக்கு பிறகு வீழ்ச்சி அடைந்த தனது சந்தையின் புதிய லோகோவைக் கொண்டு சந்தையை மாற்றியமைக்க உள்ளது. 154 நாடுகளில் அடுத்த ஆண்டின் மத்தியில் புதிய ஃபோக்ஸ்வேகன் லோகோ “sound logo” அறிமுகம் செய்யபட உள்ளது.

new volkswagen logo

வோக்ஸ்வேகன் ID.3 எலக்ட்ரிக் கார்

வோக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஐடி.3 மாடல் முதன்முறையாக மாடுலர் MEB பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட காராகும்.  ஐடி வரிசையல் பல்வேறு மாடல்களை இந்நிறுவனம் எலக்ட்ரிக் கார்களுக்காக காட்சிப்படுத்தியுள்ளது. குறிப்பாக இவற்றில் Buzz, Vizzion மற்றும் Roomzz ஆகியவை அடங்கும், இவை அனைத்தும் 2025 ஆம் ஆண்டிற்குள் மூன்று மில்லியன் மின்சார கார்களை விற்க VW குழுமத்தின் நோக்கமாகும்.

பீட்டில், கோல்ஃப் என இரு கார்களும் வோக்ஸ்வேகன் வராலாற்றில் மிகப்பெரிய பங்களிப்பை கொண்ட கார்களாகும். இவற்றை தொடர்ந்து மூன்றாவது மிகப்பெரிய பங்களிப்பாக எலக்ட்ரிக் வெர்ஷன் மாடலான ஐடி.3 காரை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

VW ID.3 மின்சார கார் மாடலில் மூன்று பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படும்; 205 மைல் (330 கி.மீ) ரேஞ்ச் வழங்கும் பேஸ் 45 கிலோவாட் ஹவர் மாடல், 261 மைல் (420 கி.மீ) ரேஞ்ச் வழங்கும் 58 கிலோவாட் ஹவர் மிட் வேரியண்ட் மற்றும் டாப் வேரியண்டில் 342 மைல் (550 கி.மீ) ரேஞ்ச் வழங்கும் 77 கிலோவாட் ஹவர் கொண்டதாகும்.

Volkswagen ID.3 interior

டாப் மாடலில் 201 HP பவரை வழங்கும் எலக்ட்ரிக் மோட்டார் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அதே வேளை பேஸ் வேரியன்டில் 147 HP பவரை வழங்கும் எலக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இரண்டு எலக்ட்ரிக் மோட்டாரும் 310 Nm டார்க்கை வழங்குகின்றது. தொடக்கநிலை மற்றும் மிட் வேரியண்ட் உச்சபட்ச வேகம் மணிக்கு 159 கிமீ ஆகும்.

20 அங்குல லைட் அலாய் வீல் பெற்ற இந்த காரின் பேஸ் வேரியண்டில் 45 KWh பேட்டரி ஆனது 50 KW சார்ஜிங் ரேட் கொண்டதாகவும், ஆப்ஷனலாக 100 KW சார்ஜிங் கொண்டதாகவும் கிடைக்கும். அரை மணிநேரத்தில் 250 கிமீ பயணிக்கும் வகையிலான சார்ஜிங் திறனை வழங்கும்.

பல்வேறு நவீன டெக் வசதிகளை பெற்றுள்ள இன்டிரியரில் 10 அங்குல சிஸ்டம் சென்ட்ரல் கன்சோலில் வழங்கப்பட்டு ஏர் அப்டேட் கொண்டதாக இருக்கும் மேலும் ஆப்ஷனாலாக augmented reality ஹெட்அப் டிஸ்பிளே கிடைக்கும். அனைத்து பட்டன்களும் தொடுதிரைக்கு இணையான அனுபவத்தை வழங்கும் டச் சென்ஸ்டிவ் பெற்றிருக்கும். வோக்ஸ்வேகன் நிறுவனம் 8 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை வழங்குகின்றது.

vw id.3

வோக்ஸ்வேகன் ஐடி.3 காரில் முதல் எடிஷன் 58  KWh கொண்டதாகவும், சர்வதேச அளவில் முதற்கட்டமாக 35,000க்கு மேற்பட்ட கார்களை அடுத்த ஆண்டின் தொடக்க முதல் டெலிவரி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Volkswagen ID.3 image gallery

Tags: VolksWagenVolkswagen ID.3வோக்ஸ்வேகன் ஐடி.3
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version