டொயோட்டா நிறுவனத்தின் லெக்சஸ் சொகுசு கார் பிராண்டில் லெக்சஸ் RX 450h எஸ்யூவி மாடல் ரூ.1.07  கோடி ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்எக்ஸ் 450எச் இருவிதமான வேரியன்டில் வந்துள்ளது.

லெக்சஸ் RX 450h எஸ்யூவி

  • RX 450h எஸ்யூவி மாடலில் ஆர்எக்ஸ் லக்சூரி மற்றும் ஆர்எக்ஸ் எஃப்-ஸ்போர்ட் என இரு மாடல்கள் கிடைக்கும்
  • 308 ஹெச்பி பவரை வழங்கும் 3.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

இந்த ஹைபிரிட் எஸ்யூவி மாடலில்  308 ஹெச்பி பவருடன் 335 என்எம் டார்க்கினை வழங்கும் 3.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு பவரை 4 சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல எலக்ட்ரானிக் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

லெக்சஸ் நிறுவனத்தின் பாரம்பரியமான முகப்பு கிரிலுடன் மிக நேர்த்தியான தோற்ற பொலிவினை பெற்றுள்ள இந்த மாடலின் முகப்பில் கூர்மையான வடிவத்தை தரும் வகையிலான முகப்பு விளக்குகளுடன் பகல் நேரங்களில் ஒளிரும் எல்இடி விளக்குகளுடன் மிக நேர்த்தியான அலாய் வீல் மற்றும் எல்இடி பின்புற விளக்குகளை கொண்டுள்ளது.

மிக நேரத்தியான 5 இருக்கை ஆப்ஷனுகளுடன் பல்வேறு விதமான நவீன அம்சங்களை பெற்றுள்ள இந்த ஹைபிரிட் எஸ்யூவி மாடலின் போட்டியாளர்கள்  ஆடி Q5, மெர்சிடஸ் GLS , போர்ஷே கேயன் மற்றும் பிஎம்டபிள்யூ X5 போன்றவைகளாகும்.

Lexus RX 450h RX Luxury – ரூ.1.07 கோடி

Lexus RX 450h RX F-Sport – ரூ.1.09 கோடி

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

மேலும் படிக்கலாமா …! லெக்சஸ் கார் செய்திகள் மற்றும் விபரம் ..!