இந்திய சந்தையில் லெக்சஸ் வெளியிட்ட பிரீமியம் எம்பிவி மாடலாக LM 350h ஆனது 4 மற்றும் 7 இருக்கை என இரு விதமான வேரியண்டில் உயர்தரமான பாதுகாப்பு கட்டுமானத்துடன் ஆடம்பர சொகுசு கப்பலை போன்ற வசதிகளை பெற்றதாக உள்ளது.
விற்பனையில் கிடைக்கின்ற டொயோட்டாவின் வெல்ஃபயர் எம்பிவி மாடலின் GA-K பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள லெக்சஸ் LM 350h காரின் நீளம் 5,130 மிமீ, 1,890 மிமீ அகலம் மற்றும் 1,945 மிமீ உயரம் கொண்டுள்ளது. ரூ.2 கோடியில் 7 இருக்கை மற்றும் லான்ஞ் பேக்கேஜ் பெற்ற 4 இருக்கை வேரியண்ட் ரூ.2.50 கோடியாகவும் உள்ளது.
லெக்ஸஸ் எல்எம் 350 எச் காரில் உள்ள 2.5-லிட்டர், 4-சிலிண்டர் சுயமாக சார்ஜிங் செய்து கொள்ளுகின்ற ஹைப்ரிட் எஞ்சின் பெற்று 250hp மற்றும் 239Nm வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் eCVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
4 இருக்கை கொண்ட வேரியண்டில் இரு பிரிவாக பிரிக்கப்பட்ட பின்புறத்தில் உள்ள இரு இருக்கைக்கு அதிகப்படியான ஆடம்பர வசதிகளாக ஏர்லைன்-ஸ்டைல் ரிக்லைனர் இருக்கை, 48-இன்ச் டிவி, 23 ஸ்பீக்கர்களை பெற்ற சரவுண்ட்-சவுண்ட் ஆடியோ சிஸ்டம், தலையணையை போன்ற ஹெட்ரெஸ்ட்கள், இருபக்கத்திற்கும் தனித்தனி ஆடியோ சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.
உயர்தரமான வசதிகளுடன் பாதுகாப்பு அம்சங்களில் Lexus Safety System+ 3 தொகுப்பு உடன் கூடிய ADAS அம்சங்களை பெற்றதாக உள்ளது.