இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள லெக்சஸ் நிறுவனத்தின் ஆடம்பர ரக எஸ்யூவி மாடலான லெக்சஸ் LX 570 எஸ்யூவி விலை ரூ. 2.23 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லேண்ட் க்ரூஸர் 200 மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட மாடலாக எல்எக்ஸ் 570 விளங்குகின்றது.
லெக்சஸ் LX 570 எஸ்யூவி
டொயோட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் லெக்சஸ் ஆடம்பர மாடல்களில் பிரசத்தி பெற்ற உயர் ரக எஸ்யூவி மாடலின் பெட்ரோல் வேரியன்ட் லெக்சஸ் LX 570 விற்பனைக்கு வெளியாகியுள்ளது. விற்பனையில் உள்ள டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 200 எஸ்யூவி அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்த மாடலில் 5.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
367 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 530 என்எம் இழுவைத் திறனை 5.7 லிட்டர் வி8 எஞ்சினை பெற்றுள்ளது. இந்த மாடலில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற்று விளங்கும் எல்எக்ஸ் 570 மாடல் 0 முதல் 100 கிமீ வேகத்தை 7.7 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.
7 இருக்கைகள் கொண்ட இந்த வேரியன்டில் 138 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இடம் பெற்று 10 காற்றுப்பைகள், 10 விதமான அட்ஜெஸ்ட் அடிப்படையில் இருக்கை அமைப்பு, பயணிகளுக்கு என 11.6 அங்குல ஸ்கிரின் என பல்வேறு அம்சங்களுடன் எவ்விதமான சாலை அமைப்பிலும் பயணிக்கும் வகையிலான நுட்ப அம்சங்களை கொண்டதாக இந்த எஸ்யூவி விளங்குகின்றது.
லெக்சஸ் LX 570 எஸ்யூவி விலை ரூ. 2.23 கோடி (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)