Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

இந்தியாவில் லெக்சஸ் சொகுசு கார்கள் இன்று அறிமுகம்

by automobiletamilan
March 24, 2017
in கார் செய்திகள்

டொயோட்டா மோட்டார் கார்பரேஷன் நிறுவனத்தின் அங்கமான லெக்சஸ் சொகுசு பிராண்டு இந்தியாவில் மார்ச் 24 , 2017ல் இன்று விற்பனைக்கு வருவதனை டொயோட்டா உறுதி செய்துள்ளது. பிரமாண்டமான எஸ்யூவிகள் மற்றும் ஹைபிரிட் சொகுசு கார்கள் லெக்சஸ் பிராண்டில் இடம்பெற்றுள்ளது.

லெக்சஸ் கார்கள்

2011 ஆம் ஆண்டு முதல் எதிர்பார்க்கப்படும் லெக்சஸ் பிராண்டு கடுமையாக வரிவிதிப்பினால் தொடர்ச்சியாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முழுதாக வடிவமைக்கப்பட்ட கார்களுக்கு இறக்குமதி வரி 100 சதவீதம் உள்ளதால் தொடர்ந்து டொயோட்டா லெக்சஸ் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதனை தள்ளிவைத்து வந்தது. தற்பொழுது சந்தையின் தன்மை மாறியுள்ளதாலும் சொகுசு கார்கள் விற்பனை அதிகரித்து வருவதனால் லெக்சஸ் பிராண்டில் கார்களை விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

இந்தியா லெக்சஸ்

லெக்சஸ் பிராண்டில் செடான் , எஸ்யூவி, கூபே ஹைபிரிட் மற்றும் பெர்ஃபாமென்ஸ்ரக கார்கள் விற்பனையில் உள்ளது.  பிராமண்டமான சொகுசு எஸ்யூவி காரான RX450 மற்றும் ES300h ஹைபிரிட் செடான் கார்கள் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.   அனைத்து மாடல்களையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். முழுதாக வடிவமைக்கப்பட்ட மாடல்களாக இறக்குமதி செய்யப்பட உள்ளது.

வருகின்ற மார்ச் 2017 யில் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வரவுள்ள லெக்சஸ் கார்களுக்கு முற்கட்டமாக டெல்லியில் 2 டீலர்களும் , மும்பை மற்றும் பெங்களுரில் தலா ஒரு டீலர்களும் துவக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்ற முன்னனி நகரங்களில் அதாவது சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் படிப்படியாக விரிவுப்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் இந்தியாவிலே பாகங்களை தருவித்து தயாரிக்க திட்டமிட்டு வருகின்றது.

மேலும் சமீபத்தில் சில வாடிக்கையாளர்களுக்கு லெக்சஸ் ஆர்எக்ஸ்450 ஹைபிரிட் கார்கள் டெலிவரியும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. கடந்த சில மாதங்களாகவே லெக்சஸ் காருக்கு டீலர்கள் வாயிலாக முன்பதிவு நடந்துவருகின்றது.

லெக்சஸ் கார் விலை பட்டியல்
  • லெக்சஸ் RX450h SUV: ரூ. 1.17 கோடி
  • லெக்சஸ் LX450d SUV: ரூ. 2 கோடி
  • லெக்சஸ் LX570d SUV: ரூ. 2.15 கோடி
  • லெக்சஸ் ES300h sedan: ரூ. 75 லட்சம்

மேலும் படிக்கலாமே ..! லெக்சஸ் கார் செய்திகள் பற்றி படிக்க..

Tags: Lexus
Previous Post

மாருதி சுசுகி ஆல்டோ K10 பிளஸ் விற்பனைக்கு அறிமுகம்

Next Post

2017 நிசான் டெரானோ கார் மார்ச் 27ல் அறிமுகம்

Next Post

2017 நிசான் டெரானோ கார் மார்ச் 27ல் அறிமுகம்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version