ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் கிளைம்பர் கார் உள்பட டஸ்ட்டர் மற்றும் லாட்ஜி ஸ்டெப்வே போன்ற மாடல்களின் விலை ரூ.5,200 முதல் ரூ. 1.04,000 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

 ரெனோ கார்கள் விலை குறைப்பு

ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் கிளைம்பர் ஏஎம்டி, டஸ்ட்டர் எஸ்யூவி மற்றும் லாட்ஜி ஸ்டெப்வே போன்ற மாடல்களுக்கு மட்டுமே விலை குறைப்பை ரெனோ வெளியிட்டுள்ளது. குறிப்பாக க்விட் கிளைம்பர் ஏஎம்டி மாடலுக்கு ரூ. 5,200 முதல் ரூ. 29,500 வரை குறைக்கப்பட்டுள்ளது.

பிரசத்தி பெற்ற ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி மாடலுக்கு ரூ.30,400 முதல் அதிகபட்சமாக ரூ.1.04,000 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

எம்பிவி ரக மாடல்களில் ஒன்றான லாட்ஜி மற்றும் லாட்ஜி ஸ்டெப்வே போன்ற மாடல்களில் ஸ்டெப்வே வேரியண்டுகளுக்கு மட்டுமே ரூ.25,700 முதல் அதிகபட்சமாக ரூ.88,600 வரை விலை குறைந்துள்ளது.

ஹைபிரிட் கார்களை தவிர மற்ற அனைத்து கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்கள் விலை கனிசமாகவே குறைந்துள்ளது. ஜிஎஸ்டிக்கு பிறகு ஆட்டோமொபைல் சந்தை புதிய எழுச்சியை பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக பிரிமியம் ரக எஸ்யூவி மாடல்கள் விலை அதிகபட்சமாக குறைந்துள்ளது.