பிஎம்டபிள்யூ X5 M |
ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனில் வந்துள்ள பிஎம்டபிள்யூ X5 M எஸ்யூவி காரில் தோற்ற அமைப்பில் முகப்பில் புதுப்பிக்கப்பட்ட நேர்த்தியான பம்பர் அதிக அகலமான ஏர் இன்டேக் , ஃபோர்ஜ் அலாய் வீல் போன்றவற்றை பெற்றுள்ளது.
உட்புறத்தில் எம் மாடல்களின் லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் , அலுமினிய கியர் ஷிஃப்ட் பெடல் , அலுமினிய இன்டிரியர் ஸ்டிரிப் , ஐ டிரைவ் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு போன்றவற்றை கொண்டுள்ளது.
567பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 4.4 லிட்டர் ட்வீன் டர்போ வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 750என்எம் ஆகும் . இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 4.2 விநாடிகள் எடுத்துக்கொள்ளும் . பிஎம்டபிள்யூ X5 M காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 250கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ X5 M காரில் 8 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , கார்னர் பிரேக்கிங் கன்ட்ரோல் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்றவற்றை பெற்றுள்ளது.
பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் காரின் போட்டியாளர்கள் போர்ஷே கேயேன் டர்போ மற்றும் மெர்சிடிஸ் GL63 AMG.
பிஎம்டபிள்யூ X5 M காரின் விலை ரூ.1.55 கோடி (எக்ஸ்ஷோரூம் இந்தியா )
BMW X5 M launched in India