இந்தியாவில் லெக்சஸ் பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மிகவும் கம்பீரமான லெக்சஸ் LX 450d எஸ்யூவி விலை ரூ.2.32 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. லேண்ட் க்ரூஸர் மாடலை அடிப்பையாக கொண்டதாகும்.

லெக்சஸ் LX 450d எஸ்யூவி

  • டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி200 காரை அடிப்படையாக கொண்டதே எல்எக்ஸ் 450d எஸ்யூவி மாடலாகும்.
  • லெக்சஸ் LX 450d எஸ்யூவி மாடலின் விலை ரூ. 2.32 கோடியாகும்.
  • 272 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

8 இருக்கைகளை கொண்ட உயர்தர பிரிமியம் சொகுசு எஸ்யூவி கார் மாடலாக விளங்குகின்ற LX 450d எஸ்யூவி மாடலில் 272 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.5 லிட்டர்  V8 சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4 சக்கரங்களுக்கும் பவரை எடுத்துச் செல்ல 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி மாடலினை அடிப்படையாக கொண்ட மாடலின் முகப்பில் லெக்சஸ் நிறுவனத்தின் பாரம்பரிய எக்ஸ் வடிவ கிரில் மிக பிரமாண்டமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதுடன் உட்புறத்தில் பல்வேறு பிரிமியம் வசதிகளை கொண்டதாக இந்த மாடல் விளங்குகின்றது.

இந்தியாவில் லெக்சஸ் ரூ.2.32 கோடியில் லெக்சஸ் LX 450d விற்பனைக்கு வந்துள்ளது. (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை)

மேலும் படிக்கலாமா …! லெக்சஸ் கார் செய்திகள் மற்றும் விபரம் ..!