வரும் மே 5ந் தேதி ஹோண்டா பிஆர் வி எஸ்யூவி கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
நாளுக்குநாள் வளர்ந்து வரும் காம்பேக்ட் ரக எஸ்யூவி சந்தையில் கடுமையான போட்டிக்கு மத்தியில் பிஆர்வி வரவுள்ளது. மிக கம்பீரமான ஸ்ட்டைலிசான தோற்றத்தில் விளங்கும் காரில் மிக அகலமான க்ரோம் பட்டைக்கு மத்தியில் அமைந்துள்ள ஹோண்டா லோகோ பதிக்கப்பட்டுள்ளது.
மிக அகலமான ஏர்டேம் , வட்ட வடிவ பனி விளக்குகள் , புராஜெக்ட்ர் முகப்புவிளக்குகளை பெற்றுள்ளது. 4455மிமீ நீளம் , அகலம் 1735மிமீ மற்றும் உயரம் 1635மிமீ பெற்றுள்ளது. மேலும் வீல்பேஸ் 2660மிமீ மற்றும் 200மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றுள்ளது.
உட்புறத்தில் 6.0 இஞ்ச் தொடுதிரை அமைப்பு , பிரியோ அமேஸ் கார்களை போன்ற டேஸ்போர்டு , யூஎஸ்பி , ஆக்ஸ், பூளூடூத் வசதிகள் மேலும் முன்பக்க இரு காற்றுப்பைகள் , ஏபிஎஸ் இபிடி போன்றவை அனைத்து வேரியண்டிலும் இடம்பெற்றிருக்கும்.
பிரியோ, அமேஸ் , மொபிலியோ கார்களின் தளத்திலே உருவாகப்பட்டுள்ள பிஆர் வி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனை பெற்றிருக்கும். 120 hp ஆற்றல் மற்றும் 145 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் மேலும் 100 hp மற்றும் 200 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் போன்றவற்றை பெற்றிருக்கும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்சினை பெற்றிருக்கலாம்.
க்ரெட்டா, எஸ் க்ராஸ் , டெரோனோ , ரெனோ டஸ்ட்டர் போன்ற மாடல்களுடன் நேரடியாக போட்டியிட ஹோண்டா பிஆர்வி மே 5ந் தேதிஅதிகார்வப்பூர்வமாக களமிறங்குகின்றது.